முச்சந்தி

அமைச்சரவையில் மாற்றம்; பிரதமராக பிமல்?

அமைச்சரவை மாற்றமொன்றுக்கு செல்வதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஜுலை மாதத்திற்குள் இவ்வாறாக அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது முக்கிய அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளதுடன், புதியவர்கள் சிலர் பிரதி அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்கவும் அமைச்சரவை மாற்றம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாகவும், தனது அமைச்சுப் பதவியிலும் மாற்றம் ஏற்படலாம் என்று அவர் கூறியுள்ளதாகவும் கொழும்பு இணையத்தளங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் தனக்கு கிடைத்த உள்ளக தகவல்களின்படி பிரதமர் பதவியிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் இந்தப் பதவிக்கு பிமல் ரத்நாயக்க நியமிக்ககப்படலாம் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போது குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button