பூமியின் ஆழ ரகசியம்: இந்தியாவில் ஒரு எரிமலை!

வானை மறைக்கும் புகை மேகங்கள், சிவந்து பொங்கும் உருகிய பாறைகள், சாம்பல் மழை. எரிமலை என்றாலே நம் மனதில் ஒரு பிரமிப்பு பிறக்கிறது இல்லையா?
இயற்கையின் அழிவு சக்தியையும், அற்புதத்தையும் ஒருங்கே கொண்ட எரிமலைகள், பூமியின் ரகசியங்களை நமக்கு வெளிப்படுத்துகின்றன. ஆனால், இவை எப்படி உருவாகின்றன? எரிமலைகளில் இருந்து நமக்கு பயனுள்ள பொருட்கள் கிடைக்கின்றனவா? மனிதர்கள் அவற்றை எப்படி பணமாக மாற்றுகிறார்கள்?
இவை எல்லாம் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால், இதை விட ஒரு ஆச்சரியமான தகவல் இருக்கிறது. இந்தியாவைப் பற்றி ஒரு ரகசியம் உங்களுக்குத் தெரியுமா? அது என்னவென்று பின்னால் சொல்கிறேன். முதலில் எரிமலைகளைப் பற்றி அறிந்து கொள்வோம்!
எரிமலை எப்படி உருவாகிறது?
பூமியின் உட்பகுதியில், மேன்ட்டில் எனப்படும் அடுக்கில் உருகிய பாறைகள் (மாக்மா) உள்ளன. பூமியின் மேற்பரப்பு பல தட்டுகளாக பிரிந்துள்ளது.
இவை மெதுவாக நகர்கின்றன. இந்த தட்டுகள் மோதும் போது அல்லது பிரியும் போது, மாக்மா மேலே புரையேற ஒரு பாதை உருவாகிறது. அழுத்தம் தாங்க முடியாத போது, மாக்மா பூமியின் மேற்பரப்பை உடைத்து வெளியேறுகிறது. இதுதான் எரிமலை வெடிப்பு. வெளியேறிய மாக்மா குளிர்ந்து பாறைகளாக மாறும்போது, எரிமலையின் வடிவம் உருவாகிறது. பெரும்பாலும், தட்டு எல்லைகளில் எரிமலைகள் தோன்றுகின்றனஉதாரணமாக, பசிபிக் பெருங்கடல் சுற்றியுள்ள “நெருப்பு வளையம்” (Ring of Fire) பகுதியில் பல எரிமலைகள் உள்ளன.
எரிமலையின் பயன்கள்: பணத்தைக் கொடுக்கும்
எரிமலைகள் அழிவை மட்டுமல்ல, பல பய(ல)ன்களையும் தருகின்றன. எரிமலை வெடிப்பின் போது வெளியாகும் சாம்பல், மண்ணை வளமாக்குகிறது.
இதனால், எரிமலை அருகே உள்ள நிலங்கள் விவசாயத்திற்கு சிறந்தவை. இத்தாலியின் வெசுவியஸ் எரிமலை அடிவாரத்தில் திராட்சைத் தோட்டங்கள் செழிப்பது இதற்கு ஒரு உதாரணம்.
எரிமலையிலிருந்து கிடைக்கும் பாறைகளும் பொருட்களும் பொருளாதார ரீதியாக முக்கியம். பியூமிஸ் (pumice) எனப்படும் லேசான எரிமலைப் பாறை, கட்டுமானம் மற்றும் அழகு சாதனப் பொருட்களில் (தேய்க்கும் பவுடர்) பயன்படுத்தப்படுகிறது.
பசால்ட் (basalt) பாறைகள் கட்டுமானத்திற்கு உதவுகின்றன. எரிமலைகளில் கிடைக்கும் கந்தகம் (sulphur), உரங்கள் மற்றும் மருந்துகள் தயாரிக்க உபயோகப்படுகிறது. இவற்றை சேகரித்து மனிதர்கள் சந்தைகளில் விற்று பணமாக்குகிறார்கள். உதாரணமாக, இந்தோனேசியாவில் உள்ள கவா இஜென் எரிமலையில், தொழிலாளர்கள் கந்தகத்தை சேகரித்து விற்பனை செய்கிறார்கள்.
![]()