பலதும் பத்தும்

ஐதராபாத் உலக அழகிப் போட்டியில் புதிய சர்ச்சை

72 ஆவது உலக அழகி போட்டி தெலங்கானாவில் நடைபெற்று வருகிறது. மே 7ஆம் திகதி தொடங்கிய இந்தப் போட்டிகள் மே 31 ஆம் திகதி வரை நடைபெறும். அரசு ஏற்பாடு செய்த பிரமாண்டமான துவக்க விழா மே 10 ஆம் நாளன்று கச்சிபவுலி மைதானத்தில் நடைபெற்றது.

தற்போது உலக அழகி போட்டிகள் தொடர்பான சர்ச்சை சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

அழகிப் போட்டியில் கலந்துக் கொள்ள வந்த பெண்களில் சிலர் ராமப்பா ஆலயத்திற்குச் சென்றபோது, ​​உள்ளூர் பெண்கள் அவர்களை வரவேற்றனர். வரவேற்ற பெண்கள், போட்டியாளர்களின் கால்களை நீரால் அலம்பியதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

‘தெலங்கானா பெண்கள், பிறருடைய கால்களைக் கழுவ வேண்டுமா?’ என்று சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை பலரும் முன்வைத்து வருகின்றனர்.

இருப்பினும், இந்த விமர்சனங்களுக்கு அந்நாட்டு மாநில அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. உலக அழகி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டதற்கு எதிராக ஏற்கனவே மகளிர் குழுக்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், தற்போது அழகிப் போட்டிகள் தொடர்பான சர்ச்சைகள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button