பலதும் பத்தும்

16 வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா இன்று  

16 வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர் நினைவு தூபியில் மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

உள்நாட்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது முப்படைகளுக்கு தலைமை தாங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஆஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட மற்றும் இலங்கை விமானப்படையின் மார்ஷல் ஆஃப் தி ரோஷன் குணதிலக ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்.

போர் வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினரால் நாடு தழுவிய சமூக நலத் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இராணுவ மரபுகளுக்கு ஏற்ப விருந்தினர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் போர்வீரர் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்துவார்கள்.

நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய போர் வீரர்களுக்கு முழு தேசத்தின் நன்றியையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதே இந்த தேசிய போர் வீரர்கள் தின நிகழ்வின் நோக்கமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button