ஜனாதிபதி அநுரவின் சண்டித்தனம் கூடாது; கோதாவுக்கு நடந்ததை மறக்கக் கூடாது

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக சண்டித்தனமாக கதைப்பதற்கு முன்னர் உள்ளூராட்சி சபைகள் கட்டளைகள் சட்டத்தில் என்ன இருக்கின்றது என்பதனை வாசித்து புரிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை கேட்டுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹுமான் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி அநுரகுமாரவை விடவும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பெரிய சண்டியர் என்றும், அவருக்கு இறுதியில் என்ன நடந்தது என்பதனையும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் முஜிபூர் ரஹுமான் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை விடவும் பெரிய சண்டியரே முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ, அவர் கடையில் எல்லாவற்றையும் எப்படி குழப்பிக்கொண்டு போனார் என்பதனை
ஜனாதிபதி கிராமங்களில் இருக்கும் சண்டியர்தானே. அதனால் அவர் மேடைகளில் சண்டித்தனம் காட்டுகின்றார். இந்த சண்டித்தனம் சரிவராது. இவரை விடவும் பெரிய சண்டியரே கோதாபய ராஜபக்ஷ, அவருக்கு கடைசியில் என்ன நடந்தது. எல்லாவற்றையும் குழப்பிக்கொண்டார். அதேபோன்று இப்போது ஜனாதிபதியின் கதைகளால் அவர்களில் வாக்குகளில் 10 வீதம் மேலும் குறைவடைந்திருக்கும்.
முதலில் உள்ளூராட்சி சபைகள் கட்டளைகள் சட்டத்தை ஜனாதிபதி வாசித்து சபையை எப்படி அமைப்பது என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். சண்டித்தன கதைகளால் அதனை செய்ய முடியாது. ஜனாதிபதியின் கருத்துக்கள் அவருக்கு பொருத்தமானது அல்ல. அவர் முழுமையாக மக்கள் வழங்கிய ஆணையை மீறுகின்றார். நாட்டில் சட்டவாட்சியை உருவாக்க பெற்ற மக்கள் ஆணையே அது. ஆனால் அந்த மக்கள் ஆணையை மீறுகின்றார். முதலில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க முன்னர் அது தொடர்பான சட்டத்தில் என்ன இருக்கின்றது என்பதனை அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். உள்ளூராட்சி சட்டத்தின்படி 50 வீதத்திற்கும் அதிகமான ஆசனங்களை எந்தக் கட்சியும் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால், அங்கே பதவிகளுக்கு எந்தக் கட்சியும் போட்டியிட முடியும். அதற்காக வாக்கெடுப்பில் அவர்கள் தெரிவு செய்யப்படுவர். ஆனால் ஜனாதிபதி கூறுவதை பார்த்தால் நாங்கள் அதில் போட்டியிடக் கூடாது என்பதை போன்றே இருக்கின்றது. ஆனால் நாங்கள் போட்டியிடுவோம் என்றார்.
![]()