இலங்கை

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பிரான்ஸ் முன் நிற்க வேண்டும்

ஐ. நா.பாதுகாப்பு சபையின் 5 நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றான பிரான்ஸ், சர்வதேச விசாரணைக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் கொண்டு வருவதில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று கடந்தவியாழக்கிழமை [2025மே 15 ] பாரிஸில் உள்ள பாராளு மன்ற வளாகத்தில் இடம்பெற்ற பிரெஞ்சு தமிழர்களுக்கான பிரெஞ்சு பாரா ளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காணொளிமூலம் உரையாற்றுகையில் வட மாகாணன் முன்னாள் முதலமைச்சரான நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்

”இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை அடையாளம் கண்டு அங்கீகரித்தல் ” என்ற கருப்பொருளில் உரையாற்றிய விக்னேஸ்வரன் ,இலங்கையின் நீதி, நிர்வாகம் , சட்டவாக்கம் ஆகிய அரசின் மூன்று பிரதான பிரிவுகளிலும் பணியாற்றிய இலங்கையரென தன்னை அறிமுகம் செய்து உரையை ஆரம்பித்து நாட்டில் தொன்று தொட்டு வாழ்ந்துவரும் தமிழ் மக்களுக்கு நீண்டகாலமாக இழைக்கப்பட்டுவரும் அநீதிகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்திருப்பதுடன் ஆர்மீனியா மற்றும் ருவாண்டாவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளை அங்கீகரித்ததைப் போன்று , இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை பிரெஞ்சு அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள் ளார்

அவர் தமதுரையில் மேலும் தெரிவித்திருப்பதாவது

தற்போதையஇன வாத மோதல், தொடர்ச்சியான சிங்கள பெரும்பான்மை மத்திய அரசாங்கங்களால் ஒரு இனமாக புராதன தமிழர்களை ஒழிக்கும் கொள்கையைச் சுற்றி மையம் கொண்டுள்ளது. தற்போது வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ந்து நடைபெறும் சிங்களமயமாக்கல் மற்றும் பவுத்த மயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கல் என்ற கொடிய ஆயுதங்களை எதிர்கொள்கின்றனர்

தமிழர்கள் தற்போது சமமான குடிமக்களாக வாழ மட்டுமே கோருகிறார்கள், தமிழர்கள் விரும்புவது “நீங்கள் வாழ்கிறீர்கள், எங்கள் பாரம்பரிய தாயகங்களில் வாழ எங்களை விட்டுவிடுங்கள்”.என்பதாகும் பிரான்சில் புலம்பெயர்ந்தோரின் ஒரு பகுதியாக சுமார் 400,000 இலங்கைத் தமிழர்கள் வாழ்கின்றனர் . அவர்களில் 80,000 பேர் பிரெஞ்சு குடிமக்கள். இன்று, பிரான்சில் உள்ள இலங்கைத் தமிழ் சமூகம் அதன் மூன்றாம் தலைமுறையில் நுழைகிறது.

2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின் போது, அப்போதைய பிரான்சின் வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கு ச்னர் இலங்கைக்கு விஜயம் செய்தார். இருப்பினும், போர்வலய நிலைமையை நேரடியாகக் காண இலங்கை அரசாங்கம் அவரை அனுமதிக்கவில்லை. ஆயினும் , ஒட்டுமொத்த சூழ்நிலையையும் கவனித்து புரிந்துகொண்ட பிறகு, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அவர் துணிச்சலுடன் கூறினார். அந்த திசையில் அவர் ஆரம்ப நடவடிக்கைகளை கூட எடுத்தார். துரதிர்ஷ்டவசமாக, ஐக்கிய இராச்சியத்தின் தலையீடு காரணமாக அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன.

பிரான்சில் 47 நகராட்சி மன்றங்கள் இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்கும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.

இலங்கையில் தமிழ் இனப்படுகொலை தொடர்பாக இந்தியாவில் உள்ள தமிழ்நாடு அரசாங்கமும் கனேடிய பாரா ளுமன்றமும் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.

இலங்கையில் தமிழ் இனப்படுகொலையை பிரெஞ்சு அரசாங்கமும் அங்கீகரிப்பதுடன்

, ஐ. நா. பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றான பிரான்ஸ் சர்வதேச விசாரணைக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் கொண்டு வருவதில் முன்னணியில் இருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *