பலதும் பத்தும்

10, 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தம்பி, தங்கைகளுக்கு எனது பாராட்டுகள்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, 10ஆம் வகுப்புக்கான தேர்வுகள் முடிவடைந்து வினாத்தாள்களை திருத்தும் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று 10, 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.

அதில் 10ஆம் வகுப்பு 93.80 சதவீத மாணவர்களும், 11ஆம் வகுப்பில் 92.09 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது..,

 

 

10 மற்றும் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள தம்பி, தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்தடுத்த வகுப்புகளில் மேலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கு, கடின உழைப்பை மீண்டும் முதலீடு ஆக்குங்கள். தன்னம்பிக்கையோடு பற்பல சாதனைகள் புரிந்து தலைசிறந்து விளங்கிடவும் வாழ்வில் வெற்றி காணவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button