உலகம்

இந்தியா – பாக்கிஸ்தான் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன! அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!

இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான உடனடியான போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவில், இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளன என்பதை அறிவிக்கிறேன் என அமெரிக்க ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாகிஸ்தான் எப்போதும் அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதிக்காத வகையில் இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு பாடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *