உலகம்

ரஷ்யா – உக்ரேன் இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு

அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் வகையில் ரஷ்யா- உக்ரேன் இடையே 30 நாள் போர் நிறுத்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் நாட்டின்மீது கூடுதல் தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் எச்சரித்துள்ளார்.

“அமெரிக்க ஜனாதிபதியாக , ஐரோப்பியர்களுடன் சேர்ந்து ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையில் அமைதியைக் கொண்டுவர தான் உறுதியாக இருப்பதாகவும், அது ஒரு நீடித்த அமைதியாக இருக்கும் என்றும் ட்ரம்ப் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, 30 நாள் போர் நிறுத்தத்திற்கு உக்ரேன் இந்த நிமிடமே தயாராக இருப்பதாகத் ட்ரம்ப்பிடம் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வியாழக்கிழமையன்று (மே 8) அமெரிக்க ஜனாதிபதியுடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது செலன்ஸ்கி அவ்வாறு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

அத்துடன் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்துடன் தொடங்கி, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது தயார்நிலையை ரஷ்யா வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனவும் செலன்ஸ்கி தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜெலன்ஸ்கியுடன் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் விருப்பம் காட்டவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button