முட்டை வேகவைப்பான்கள் (Egg Cookers) வீடுகளுக்கு பயனுள்ளதா? – ஒரு பார்வை

வீடுகளில் வழக்கமாக பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் முட்டையை வேகவைப்பது சுலபமான காரியம்தான். இருப்பினும், முட்டையை மிகக் கச்சிதமாகவும் துல்லியமாகவும் வேகவைக்க சந்தையில் 1,000 முதல் பல்வேறு அளவுகளில் ‘எக் குக்கர்கள்’ விற்பனைக்குக் கிடைக்கின்றன.
தினமும் முட்டை சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கும், ஒரே நேரத்தில் 5-க்கும் மேற்பட்ட முட்டைகளை வேகவைக்க நினைப்பவர்களுக்கும் இது நேரத்தை மிச்சப்படுத்தும்.
பாடசாலை முடிந்து வரும்பிள்ளளைகளே சுயமாக முட்டையை வேகவைத்துச் சாப்பிடும் அளவுக்கு இது பாதுகாப்பானதாகவும் எளிதாகவும் இருக்கும்.
அத்துடன் முட்டை பஜ்ஜி செய்ய கெட்டியாகவும், குழந்தைகளுக்குக் கொடுக்க மிருதுவாகவும் என நமக்குத் தேவையான பக்குவத்தில் வேகவைக்க இது உதவுகின்றது.
சமையல் நேரத்தில் அடுப்பின் அனைத்து பேனர்களும் பயன்பாட்டில் இருக்கும்போது, கேஸ் அடுப்பை எதிர்பார்க்காமல் தனியாக விரைவாக முட்டையை வேகவைக்கலாம்.
இதேவளை, புதிய Kitchen Appliances-களைப் பயன்படுத்த விரும்புபவர்களுக்கும், மற்றவர்களுக்குப் பயனுள்ள பரிசாக வழங்குவதற்கும் இது சிறந்த தேர்வாக இருக்கும்.
சமையலறையில் போதிய இடமும், சமையல் வேலையை விரைவாக முடிக்க விரும்புபவர்களுக்கும் இந்த முட்டை வேகவைப்பான் நிச்சயம் ஒரு பயனுள்ள சாதனமாகும்.
![]()