பலதும் பத்தும்

பாடசாலை மாணவர்களுக்கு சமைத்த உணவில் பாம்பு – 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு

பாடசாலை மதிய உணவில் உயிரிழந்த பாம்பு ஒன்று இருந்த நிலையில், அந்த உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய்வாய்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

சமையல்காரர் உயிரிழந்த பாம்பை ஒதுக்கிவிட்டு மதிய உணவை பரிமாறியதாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

கிழக்கு இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மொகாமா நகரில் சுமார் 500 குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டதாக நம்பப்படுகிறது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் நோய்வாய்ப்படத் தொடங்கியதை அடுத்து, உள்ளூர்வாசிகள் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், “குழந்தைகளின் சுகாதார நிலை” உள்ளிட்ட மூத்த மாநில அதிகாரிகளிடமிருந்து இரண்டு வாரங்களுக்குள் “விரிவான அறிக்கை” கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிய உணவு என்று அழைக்கப்படும் இலவச பாடசாலை உணவு, 1925ஆம் ஆண்டு தெற்கு நகரமான சென்னையில் (மெட்ராஸ்) ஏழைப் பின்னணியைச் சேர்ந்த குழந்தைகளுக்காக முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றான இது, பசியை எதிர்த்துப் போராடவும் பாடசாலை வருகையை அதிகரிக்கவும் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், உணவு சுகாதாரம் மோசமாக இருப்பதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.

2013 ஆம் ஆண்டில், பீகார் மாநிலத்தில் 23 பாடசாலை மாணவர்களின் இறப்புக்கு மோசமான உணவு சுகாதாரமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button