கவிதைகள்
சிந்தனையில் சிறகடித்தவை… கவிதை… சங்கர சுப்பிரமணியன்

அம்மாவுக்கு காட்டிலே வேலை
அப்பாவுக்கு பாட்டிலே வேலை
பிள்ளைகள் தெருவிலே
கையூட்டு வேண்டாமென்றார்
துரிதமாக பணியை முடித்தார்
தங்கநகை கைமாறியது
தாலிக்குத் தங்கம் கொடுப்போம்
அரசாங்கம் அறிவிப்பு செய்தது
தங்கம் விலையேறியதால் தடை
வறுமைநிறம் சிகப்பாம்
உழவரோ பச்சை துண்டுடன்
வளமாக வாழ்கின்றாரோ
எல்லாம் தெரியுமென்பான்
எல்லாவற்றிலும் முதல் அவனென்பன்
கடைசியை முதலென்கிறானோ?
நூல்கள் பல வெளியிட்டேன்
நூலகத்தில் எதுவும் இல்லை
அலமாரியை அழகுசெய்தன

![]()