பலதும் பத்தும்

ஹீரோவாக அறிமுகமாகும் இலங்கையின் ராப் பாடகர்..!; முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜனனி

தமிழ் சினிமாவில் புதுமுகங்களுக்கென்றே எப்பொழுதும் ஒரு விசேஷமான வரவேற்பு உள்ளது. அந்த வகையில், தற்போது இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகர் ஒருவர், ஹீரோவாக களமிறங்குவதற்கான அதிரடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். வாகீசன் எனப்படும் இந்த ராப் பாடகர், வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மைனர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கின்றார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பிறந்து வளர்ந்த வாகீசன், தமிழ் ஹிப் ஹாப் மற்றும் ராப் இசை உலகத்தில் தனக்கென ஒரு தனிச்சிறப்பை உருவாக்கியவர். இளைய தலைமுறையின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பல்வேறு ராப் பாடல்களை உருவாக்கிய அவர், தமிழ் மொழியை இசை வழியாக உலகமே கேட்கச் செய்தவர் எனலாம்.

இவர் பாடிய பல பாடல்கள் இலங்கை, இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள தமிழ் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. தனது கவிதைகளில் உறுதியான வரிகளும், உருக்கமான உணர்வுகளும் கலந்து பாடும் வாகீசன், தற்போது நடிகனாக வருகிறார் என்பது அனைத்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படம் இலங்கை தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு ரசிகர்களுக்கும் இடையே ஒரு மிகப் பெரிய கலாசாரத் தொடர்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் ‘மைனர்’ திரைப்படம் முழுமையாக முடிந்தவுடன் அதன் முதல் லுக், டீசர், பாடல்கள் என அனைத்தும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டணியின் வெற்றிக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button