முச்சந்தி
சிட்னியில் தமிழ் ஆர்வலர்களை சந்தித்த புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் பாஞ்ச். ராமலிங்கம்…. ஐங்கரன் விக்கினேஸ்வரா

சிட்னிக்கு இவ்வாரம் வருகை தந்த புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் பாஞ்ச். ராமலிங்கம் தமிழ் ஆர்வலர்களை சந்தித்தார்.
தற்போது பாண்டிச்சேரி பல்கலைக்கழக உளவியல் துறை முனைவராகவும், பாண்டிச்சேரி பல்கலைக்கழக இயக்குநராகவும் பேராசிரியர் பாஞ்ச். ராமலிங்கம் பணியாற்றி வருகிறார்.
அத்துடன் புதுவை பல்கலைக் கழகங்களின் ஆசிரியர்களுக்கான திட்டங்களைத் திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்காக பல்கலைக்கழக மானியக் குழுவால் நிறுவப்பட்ட உயர்கல்வி ஆசிரியர் மேம்பாட்டு மையத்திலும் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வியில் ஆசிரியர்களின் தொழில்முறை மேம்பாடு தொடர்பான நோக்குநிலை, புத்தாக்கப் படிப்புகள் மற்றும் திட்டங்களை கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பதில்
30 ஆண்டுகளாக சிறந்த அனுபவம் உள்ள பேராசிரியராக கடமை புரிந்துள்ளார்.
சிட்னியில் புதுவை பல்கலைக்கழக பேராசிரியர் பாஞ்ச். ராமலிங்கம் அவுஸ்திரேலிய தமிழ்க் காங்கிரசின் (ATC) செயற்பாட்டாளர்களுடன் நட்புறவு கலந்துரையாடலை நடத்தினார்.
கடந்த 18/4/25 வெள்ளி மாலை நிகழ்வில் உண்மையை உரக்கக் கூறி,
தமிழர்க்காக ஓங்கி குரல் தரும் மருத்துவர் பிரைன் செனவிரத்தினவின் நூலும் வெளியிடப்பட்டது.
தமிழ் மக்களுக்கு ஆதரவான தார்மீக நிலைப்பாட்டை என்றும் கொண்டிருப்பவரும், அநீதிகளை உலகறிய செய்து, ஈழத் தமிழர்களுக்காக என்றும் ஓங்கி குரல் கொடுக்கும் மருத்துவர் பிரைன் செனவிரத்தின எழுதிய “இலங்கையில் தமிழர்கள் மீதான ஆயுதப் படையினரின் பாலியல் வன்முறை” எனும் நூலும் வெளியிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட தமிழர்களின் கண்ணீரைத் துடைப்பது மட்டுமின்றி வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களுக்குத் தேவையான நேரத்தில் உதவி செய்யமுடியாத ஒருவனின் மன்னிப்பு எனும் பொருள்பட மருத்துவர் பிரைன் செனவிரத்தினாவால் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
![]()