11 நிமிட விண்வெளி சுற்றுப் பயணம்… எவ்வளவு செலவாகும் தெரியுமா..?

11 நிமிடங்கள் கொண்ட விண்வெளி சுற்றுப்பயணத்துக்கு எவ்வளவு செலவாகும் என்று உங்களுக்கு தெரியுமா?. இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த 1963ஆம் ஆண்டு ரஷிய விண்வெளி வீராங்கனை வேலண்டினா தெரஸ்கோவா, தனியாக விண்வெளி பயணம் மேற்கொண்டார். அதன் பின் முதல் முறையாக முற்றிலும் பெண்கள் மட்டுமே அடங்கிய குழு தனியாக விண்வெளி பயணம் சென்று திரும்பியுள்ளது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாசுக்கு சொந்தமான ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம, நியூ செப்பர்டு என்ற விண்கலம் மூலம் மனிதர்களை விண்வெளி சுற்றுலா அழைத்துச் சென்று வருகிறது.
அதன்படி, விண்வெளிப் பயணத்தில் புது முயற்சியாக முற்றிலும் பெண்கள் மட்டுமே அடங்கிய குழுவை இந்த நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பியது. இந்தக் குழுவில், பாப் பாடகி கேட்டி பெர்ரி, பத்திரிகையாளர் கேல் கிங், வழக்கறிஞர் அமாண்டா நுயென், நாசாவின் முன்னாள் விஞ்ஞானி ஆயிஷா போவே, திரைப்படத் தயாரிப்பாளர் கேரியன் ஃப்ளின் ஆகியோர் இடம் பெற்றனர். இக்குழுவை வழிநடத்த ஜெஃப் பெசோஸின் காதலியான லாரன் சான்செஸ் உடன் சென்றார்.
![]()