வேலை நேரம் முடிவதற்கு ஒரு நிமிடம் முன்னதாக சென்றதால் பணிநீக்கம் செய்யப்பட்ட சீனப்பெண்

தான் பணிபுரிந்த நிறுவனத்தில் மாதத்தில் ஆறு நாட்கள் வேலை நேரம் முடிவதற்கு ஒரு நிமிடம் முன்னதாகவே அலுவலகத்தை விட்டு வெளியேறியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டார் சீனப் பெண் சட்டப்போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
வாங் என்ற குடும்பப்பெயர் கொண்ட சீன பெண், இந்த ஆண்டின் தொடக்கத்தில் குவாங்டாங் மாகாணத்தின் குவாங்சோவை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார். “நல்ல செயல்திறன் கொண்ட ஊழியர்” என்று அந்த நிறுவனத்தில் நன்மதிப்பு கொண்ட அவர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வழக்கு தொடர்ந்ததையடுத்து, சம்மந்தப்பட்ட அந்த நிறுவனம் வாங்கை சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்ததாகவும், அவருக்கு தகுந்த இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் வாங் தனது பணி நேரத்தில் இருந்து ஒரு நிமிடம் முன்னதாக சென்றது “அவர் சீக்கிரமாக வெளியேறியதற்கு” சமமாகாது என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.
![]()