முச்சந்தி
காசாவில் ஐநாவின் 15 ஊழியர் படுகொலை!… 2006இல் மூதூரில் 17 தொண்டர்கள் படுகொலை!… – ஐங்கரன் விக்கினேஸ்வரா

( காசாவில் ஐநா ஊழியர் 15 பேரை மார்ச் 23இல் இஸ்ரேலிய படைகள் படுகொலை செய்தது போன்று, 2006ம் ஆண்டு ஈழத்தில் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரு நிகழ்வுகளும் மிலேச்சத்தனமான இரக்கமற்ற கொடூரமான செயல்களாகும். இதுவரை கொடூரமான இக்கொலைகளுக்கு உரித்தான நீதி கிடைக்கவில்லை)காசாவில் மனிதாபிமான உதவிக்குழு ஊழியர்கள் 15 பேரை படுகொலை செய்த இஸ்ரேல் படைகளின் கடைசி நிமிட வீடியோ வெளியாகி அம்பலம் ஆகியுள்ளது.
ஐநாவின் UNWRA சேர்ந்த ஊழியர்கள் 15 பேர் 2025 மார்ச் 23 ஆம் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் வேண்டும் என்றே உதவிக்குழுவினர் 15 பேரை படுகொலை செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
இன்று காசாவில் நடந்தது போல, அன்று 2006ம் ஆண்டு ஈழத்தில் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் நடந்த படுகொலைச் சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்சன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.கொலை செய்யப்பட்டு பல ஆண்டுகள் கழிந்தும், தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றார்கள்.
இந்த இரு நிகழ்வுகளும் மிலேச்சத்தனமான இரக்கமற்ற கொடூரமான செயல்களாகும். இதுவரை இத்தகைய கொடூரமான கொலை நிகழ்வுகளுக்கு உரித்தான நீதி கிடைக்கவில்லை என்பதே உண்மையாகும்.
காசா மனிதாபிமான ஊழியர் கொலை:
கடந்த மார்ச் 23 ஆம் தேதி காசாவில் உள்ள ராவா நகரத்தில் அம்புலன்ஸ்களில் சென்று கொண்டிருந்த ஐநா உதவுக் குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர்.
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்து வந்த ஊழியர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் பாலஸ்தீன சிவப்பிறை சங்கம் (ரெட் கிரசண்ட்) ஊழியர்கள் எட்டுப்பேர், பாதுகாப்பு அவசரப்பிரிவை சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் மற்றும் ஐநாவின் UNWRA சேர்ந்த ஊழியர் ஒருவர் என மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்.
அவர்கள் உதவிக்குழுவைச் சேர்த்தவர்கள் என்று தெரிந்தே இஸ்ரேல் வேண்டுமென்றே
அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கள் வீரர்களை நெருங்கி வந்த வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கள் வீரர்களை நெருங்கி வந்த வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.இந்நிலையில் அன்றைய தினம் நடந்த தாக்குதல் தொடர்பான, உயிரிழந்த உதவிக்குழுவில் இருந்த பாலஸ்தீனிய ஊழியர் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் பொய் முகத்திரையை கிழித்த வீடியோ:
நியூயார்க் டைம்ஸ் தற்போது வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், ஊழியர்கள் பயணம் செய்த அம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களில் அவசரநிலையை உணர்த்தும் விளக்குகள் எரிந்த நிலையில் இருப்பதும், இஸ்ரேலிய ராணுவத்தினர் வாகனங்களை நோக்கியும் உதவிக் குழுவினரை நோக்கியும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியது பதிவாகி உள்ளது.
இதன்படி இஸ்ரேல் வேண்டும் என்றே உதவிக்குழுவினர் 15 பேரை படுகொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கண்டங்கள் எழுந்து வருகின்றன. இந்த காணொளி குறித்து இஸ்ரேல் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
காசா மக்களுக்கு அத்தியாவசிய மனிதாபிமான உதவிகளை வழங்கி வந்த அப்பாவி ஊழியர்கள் இஸ்ரேல் ராணுவத்தினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்
உலகளவில் கண்டன அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொடூரமான தாக்குதலில் பாலஸ்தீன சிவப்பிறை சங்கம் (Palestinian Red Crescent Society)
தன்னார்வலர்கள், பாதுகாப்பு அவசரப் பிரிவு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகமைக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனம் (UNRWA) ஊழியரே
இரக்கமின்றி கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் வேண்டுமென்றே தாக்கியது:
உயிரிழந்தவர்கள் அனைவரும் பட்டினி மற்றும் நோயால் வாடும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைச் செய்வதற்காக பாலஸ்தீன போர்க் களத்தில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் உதவி பணியில் ஈடுபட்டிருந்ததை அறிந்தும் இஸ்ரேல் வேண்டுமென்றே இந்த தாக்குதலை நடத்தியதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஆரம்பத்தில், இஸ்ரேல் தரப்பில், சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கள் ராணுவ வீரர்களை நெருங்கி வந்த வாகனங்கள் மீது தவறுதலாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஒரு பொய்யான அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில், இந்த வெறித்தனமான தாக்குதல் நடந்த அன்று, உயிரிழந்த மனிதாபிமான உதவிக்குழு ஊழியர்களில் ஒருவரான பாலஸ்தீனியரின் கைப்பேசியிலிருந்து கைப்பற்றப்பட்ட ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வெளியாகி இஸ்ரேலின் பொய் முகத்திரையை கிழித்துள்ளது.நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், மனிதாபிமான ஊழியர்கள் பயணித்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களில் அவசரநிலையை குறிக்கும் பிரகாசமான சிவப்பு விளக்குகள் எரிந்த நிலையில் தெளிவாகத் தெரிகின்றன.
இருந்தபோதிலும், இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அந்த வாகனங்களை குறிவைத்தும், வாகனங்களில் இருந்து வெளியேற முயன்ற உதவிக்குழுவினரை நோக்கியும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள கொடூரமான காட்சிகள் அந்த வீடியோவில் துல்லியமாக பதிவாகியுள்ளன.
மூதூரில் 17 தொண்டர்கள் படுகொலை:
ஈழப் போர் தீவிரம் அடைந்த காலத்தில் மூதூரில் அக்சன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வும் அரச படைகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலையாகும்.
2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் நடந்த படுகொலைச் சம்பவத்தில், பிரான்ஸ் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்களின் மரணம் அக்காலத்தில் மூடிமறைக்கப்பட்டது.
எனினும் தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்து போராடி வருகின்றார்கள்.
2006ம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள் மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.
குறித்த படுகொலைச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
நீதியின் முன் குற்றவாளிகள் நிறுத்தப்படவில்லை ?
மூதூரில் தொண்டர் நிறுவன ஊழியர்கள் 17 பேரைப் படுகொலை செய்தவர்களை நீதிக்கு
முன்னால் இலங்கை அரசாங்கம் நிறுத்தவில்லை என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் நீண்ட காலமாக குற்றம்சாட்டியுள்ளது.
முன்னால் இலங்கை அரசாங்கம் நிறுத்தவில்லை என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் நீண்ட காலமாக குற்றம்சாட்டியுள்ளது.யுத்தக் குற்றம் மற்றும் தொண்டர்களின் கொலை தொடர்பில் வெளிநாட்டுப் பங்களிப்புடன் கூடிய விசாரணை உரிய முறையில் நடக்க உறுதிசெய்ய வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது.
தொண்டு நிறுவன ஊழியர்களின் இந்தப் படுகொலைக்கு நீதி கிடைக்காமை, யுத்தத்தின் போது நடந்த கடும் குற்றச் செயல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதை உதாசீனம் செய்தமைக்கு முதல் சாட்சியாக இலங்கை உள்ளதென, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதனாலேயே சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றத்துக்கு சர்வதேசத்தின் பங்கு ஏன் தேவை என்பதை, 17 தொண்டர்களின் கொலைகள் தொடர்பில், நடந்த விசாரணை முறை எடுத்துக் காட்டியுள்ளது.
அத்துடன் யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைக்கான சங்கம், தனது ஆய்வின் அடிப்படையில், அவ்விடத்தில் காணப்பட்ட அரச படையினரே இக்குற்றத்தை இழைத்ததாகக் கூறியிருந்தது.இதில் பொலிஸ் கான்ஸ்டபிள்களும் இலங்கை கடற்படையின் விசேட படையினரும் நேரடியாகக் பங்கேற்றதாகவும் இச்சம்பவத்தை மூடிமறைப்பதற்காக பொலிஸ் அதிகாரிகளும் நீதித்துறை அதிகாரிகளும் உதவியதாக சங்கம் கூறியிருந்தது.
இறுதியாக இந்த விசாரணை ஆணைக்குழு, குற்றவாளிகளை இனங்காணப் போதிய சாட்சியங்கள் இல்லையெனக் கூறி, வழக்கிலிருந்து, இராணுவ மற்றும் கடற்படையினரை விடுவித்தது.
யுத்தக் குற்ற விசாரணை:
மேலும் யுத்தக் குற்றங்களை விசாரிப்பதற்கான நீதிமுறைமையில், ஒத்துக்கொண்ட விடயங்களை அரசாங்கம் மறுத்து வருகின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வெளிநாட்டுப் பங்குபற்றுதலை கோரியிருந்தனர். ஆனால் அரசாங்கம், ஜெனீவாக் கட்டுப்பாட்டுக்கு அமைய நடந்து கொள்ளும் எனத் தீர்மானிக்க முடியாமல் இருந்தது.
போர்க்குற்ற விசாரணையில் அரசாங்கம் அதன் சர்வதேச வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வேறு ஆட்களின் பங்குபற்றலுடன் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
கொலையுண்ட 17 பணியாளருக்கும் வேற பாதிக்கப்பட்டோருக்கும் உண்மையான நீதி கிடைக்க சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
![]()