முச்சந்தி

பிள்ளையான் கைது!; வெடிகொழுத்தி கொண்டாடிய – மட்டு.இளைஞர்கள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டமைக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி கொண்டாடியதாக  தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் (08) மாலை பட்டாசு கொழுத்தப்பட்டு மகிழ்ச்சிக் கொண்டாட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது;

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கட்சி அலுவலகத்தில் வைத்து  இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வந்த குற்றப்புலனாய்வுத்துறையினர் அவரை கைது செய்துள்ளதுடன் உடனடியாக கொழும்புக்கு கொண்டு செல்லும் பணியையும் முன்னெடுத்துள்ளனர்.

இதேநேரம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button