இலங்கையும் இந்தியாவின் ஒரு பகுதியாகி விடலாம்?

இந்தியாவுடன் இலங்கை செய்துகொண்ட பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தால் அகண்ட பாரத் திட்டத்தின் கீழ் இலங்கையும் இந்தியாவின் ஒரு பகுதியாகிவிடுமோ என்ற சந்தேகங்கள் எழுவதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
சர்வஜன பலய கட்சியினால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சுதந்திர இலங்கையில் இதற்கு முன்னர் எந்தவொரு அரச தலைவரும் செய்யாத இந்தியாவுடனான பாதுகாப்பு உடன்படிக்கையை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் செய்துகொண்டுள்ளார். பிரதமர்களாக பதவி வகித்த பண்டாரநாயக்க, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க ஜனாதிபதிகளாக பதவி வகித்த ஜே.ஆர்.ஜயவர்தன, ரணில் விக்கிரமசிங்க கோதாபய ராஜபக்ஷ மற்றும் மகிந்த ரராஜபக்ஷ ஆகியோருக்கு சர்வதேச பாதுகாப்பு தொடர்பான தெளிவுகள் இருந்தனர். இவர்களில் எவரும் இந்தியாவுடன் இவ்வாறான உடன்படிக்கையை செய்யவில்லை.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி இந்தியாவுடன் பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையை செய்துகொண்டு, தனக்கு உலக அரசியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான எவ்வித அனுபவமோ, தெளிவோ இல்லை என்பதனை வெளிக்காட்டியுள்ளார்.
உலகில் பெரும் வல்லரசுகளாக சீனாவும் இந்தியாவும் உள்ளது. சீனாவுக்கு முகம்கொடுப்பதற்காக மேற்குலக வல்லரசுகள் இந்தியாவுடன் இருக்கின்றது. இந்து சமுத்திரத்தில் தமது அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காக அந்த நாடுகள் முயற்சிக்கின்றன. 2600 வருட எழுத்துமூலமான வரலாற்றில் இலங்கை முகம்கொடுத்த 21 ஆக்கிரமிப்புகளில் 17 ஆக்கிரமிப்புகள் இந்தியாவிடம் இருந்தே வந்துள்ளன. இதனால் நாங்கள் இந்தியாவிடம் இருந்து பாதுகாப்பை பெற வேண்டுமென்றால் அந்த நாட்டுடனேயே பாதுகாப்பு உடன்படிக்கையை செய்துகொள்வது மிகவும் அச்சுறுத்தலான நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம்.
இந்தியாவில் பிறந்த கௌடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் உங்களுக்கு அருகில் உள்ளவர் உங்களுக்கு அச்சுறுத்தலானவர் எனவும் அருகில் உள்ளவரின் எதிரியே உங்களின் பாதுகாவலர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவின் பக்கத்தில் இருந்து பார்த்தால் இவ்வாறான உடன்படிக்கை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.
இந்திய பிரதமர் தனது உரையின் போது இந்தியாவின் தேவை தொடர்பில் அநுரகுமார புரிந்துகொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அப்படியாயின் பிரிவுபடாத இந்தியாவா அல்லது பரந்தளவிலான பாரத்தா? இதன்படி பார்த்தால் இலங்கை இந்தியாவின் பகுதிகளில் ஒன்றாக இருக்கலாம். பரந்துபட்ட பாரத் திட்டம் இந்தியா பாராளுமன்றத்தில் வெளிப்பபடுததப்பட்டுள்ளது. அதில் ஒரு அங்கமா இது. அப்படிஅப்படியாயின் பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கையை புலி வாலை பிடித்த கதையாகவே பார்க்கின்றோம் என்றார்.
![]()