முச்சந்தி
“குருவே, எனக்கு பறவையின் கண்கள் மட்டுமே தெரிகிறது”

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு எதிர்வரும் 4ஆம் திகதி அன்று விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இலங்கை-இந்திய பாதுகாப்பு உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன என தகவல்கள் கசிந்துள்ளன.
இந்நிலையில், பத்திரிக்கையில், இவ்வாறு சிந்தனை சித்திரம் கீறப்பட்டுள்ளது.
அதில், இந்திய பிரதமர் தன்னுடைய கையில், இந்திய-இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் என்று எழுதப்பட்ட பிரசுரத்தை வைத்துக்கொண்டு, குறி வைக்குமாறு இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கையை நீட்டி பணிக்கிறார்.
எனினும், வில்லில் அம்பை ஏற்றி குறிவைத்திருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, “குருவே, எனக்கு அந்த பறவையின் கண்கள் மட்டுமே தெரிகிறது” என பதிலளிக்கும் வகையில் கீறப்பட்டுள்ளது.
![]()