பலதும் பத்தும்

பொலிஸாரை இழுத்து வீட்டுக்குள் பூட்டி அடைத்த இளைஞர்கள்

திருகோணமலை நிலாவெளி உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில் அதிக சத்தத்தை எழுப்பிய குற்றச்சாட்டின் பேரில் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து கைது செய்ய முற்பட்ட போக்குவரத்து பொலிஸாரை தங்களது கடமையை செய்ய விடாது தடுத்துள்ள சம்பவம், திங்கட்கிழமை (31) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நிலாவெளி அடம்போடை பகுதியை சேர்ந்த வயது(17)இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞர் பொலிஸாருக்கு தங்கள் கடமையை செய்ய விடாது வீட்டுக்குள் இழுத்து சென்ற குற்றச் சாட்டில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

போக்குவரத்து பொலிஸார் இருவரும் கடமையில் இருந்து தங்கள் கடமையை செய்ய முற்பட்ட போது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்துடன் 4 நபர்கள் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button