முச்சந்தி

ரணிலின் 1200 கோடி டொலர் முதலீடே நாடு வங்குரோத்தடையக் காரணம்

நாட்டை கடனிலிருந்து மீட்பதற்காக ரணில் விக்ரமசிங்க வந்ததாக கூறப்பட்டாலும், நல்லாட்சி அரசாங்கத்தில் சர்வதேச இறையாண்மை பத்திரத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட 12 பில்லியன் (1200 கோடி) டொலர் முதலீடே, நாட்டின் திவால் நிலைக்கு முக்கிய காரணமென முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைந்த கடன் குறைப்பு சலுகையை பெற்ற நாடாக இலங்கை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை திவால்நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பெருமையுடன் அறிவித்தாலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச இறையாண்மை பத்திர நிறுவனங்களுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தத்தை எந்த மாற்றமும் செய்யாமல் நாட்டின் அதிகாரப்பூர்வ ஒப்பந்தமாக மாற்றியமைத்ததே அநுரவின் சாதனையெனவும் தெரிவித்தார்.

2014 வரை இலங்கையின் முழு வரலாற்றிலும் ஐ.எஸ்.பி. இருந்ததில்லை. 2014 ஆம் ஆண்டு இந்த ஐ.எஸ்.பி. நிறுவகத்திடமிருந்து கடன் வாங்கத் தொடங்கிய இலங்கையில் முதல் நபர் மஹிந்த ராஜபக்ச ஆவார். மஹிந்த ராஜபக்ச நிதி அதிபர்களிடமிருந்து 4 பில்லியன் டொலர்களை கடன் வாங்கியிருந்தார். பின்னர், கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியின் போது, அந்தத் தொகை வட்டியுடன் செலுத்தப்பட்டது.

ரணில் விக்ரமசிங்க எங்களை கடனில் இருந்து காப்பாற்ற வந்த தேவதை அல்ல. இலங்கையை கடன் வலையில் சிக்க வைத்த ஒரு கும்பலின் தலைவர் ரணில் விக்ரமசிங்க. அவரது நல்லாட்சியின் போதுதான் ஐ.எஸ்.பியில் 12 பில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டன. அந்த 12 பில்லியன் டொலர்களை எங்களால் செலுத்த முடியாததால் நாங்கள் திவால்நிலையை அறிவித்தோம்.

அந்த 12 பில்லியன் டொலர்களுடன் வட்டியையும் சேர்த்து, இப்போது நாம் 16.7 பில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும். உலகின் ஒவ்வொரு நாடும் நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கி, திவாலாகி, அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல், பின்னர் கடன் குறைப்பைக் கேட்கின்றன.

ரணில் விக்ரமசிங்க செப்டம்பர் 19, 2024 அன்று சர்வதேச இறையாண்மை பத்திர நிறுவனங்களுடன் எட்டிய ஒப்பந்தம், ஒரு எழுத்து கூட மாறாமல் நாட்டின் அதிகாரப்பூர்வ ஒப்பந்தமாக மாறியது. இனி, இந்த அழிவைச் செய்தவர் அனுர குமார திசாநாயக்க என்று வரலாறு எழுதும். ரணில் விக்ரமசிங்க அல்ல. சில நாட்களில், ரணில் வந்து, இந்த பேரழிவு ஒப்பந்தத்திற்கு நான் உடன்படவில்லை, அனுரதான் ஒப்புக்கொண்டார் எனக் கூறுவார்.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், திவாலான பிறகு மிகக் குறைந்த அளவு கடன் குறைப்பைப் பெற்ற உலகின் ஒரே நாடாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. ஈக்குவடோர் 67.7 வீத கடன் குறைப்பைப் பெற்றது. அவர்கள் வாங்கிய மொத்தக் கடனில் 67.7 வீத குறைக்க ஒப்புக்கொண்டனர்.

சீசெல்ஸ் திவாலான பிறகு, அவர்கள் தங்கள் மொத்த கடனில் 56.2 வீதத்தை தள்ளுபடி செய்ய ஒப்புக்கொண்டனர். பின்னர், ஆபிரிக்க நாடான கானா, ஏப்ரல் 2022 இல் எங்களுடன் சேர்ந்து திவால் நிலையை அறிவித்தது, எங்களுடன் சேர்ந்து கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.

மேலும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் இலங்கை இடைத்தரகர்களாகப் பயன்படுத்திய இரண்டு நிறுவனங்களான கிளிஃபோர்ட் சான்ஸ் மற்றும் லாசார்டை இடைத்தரகர்களாகப் பயன்படுத்தி, கானா எங்களைப் போலவே அதே கடன் சுமையைக் குறைக்கச் சென்றது, மேலும் 37 வீத கடன் குறைப்பைப் பெற்றது.

அனுர பெருமையுடன் சொல்லும் அந்த ஒப்பந்தத்தின்படி, தேர்தல் பிரச்சாரம் முடிந்த பிறகும் இலங்கையை திவால் நிலையில் இருந்து மீட்டதாக ரணில் பெருமையாகக் கூறும் அந்த ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் கடன் 14 வீதமாக குறைக்கப்படும். இது உலகில் ஒரு திவாலான நாடு இதுவரை எடுத்த மிகக் குறைந்த கடன் குறைப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button