பலதும் பத்தும்

2 தாலி, 2 கணவர்கள்: ஒரே வீட்டில் வாழும் பெண்

ஒரு பெண்ணை திருமணம் முடித்துக்கொண்டு நிம்மதியாக வாழ முடியவில்லை என பலரும் புலம்புவதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேபோல, ஏன்டா இந்த திருமண வாழ்க்கை தனியாக நிம்மதியாக இருந்திருக்கலாம் என பெண்கள் கூறுவதையும் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறான நிலையில், இரண்டு ஆண்களை பெண்ணொருவர் திருமணம் முடித்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் 2 தாலிகள் கட்டிக்கொண்டு 2 கணவர்களுடன் வாழ்வதாக கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேசம் தியோரியா பகுதியை சேர்ந்த அந்த இளம்பெண் கழுத்தில் 2 தாலிகள்
அணிந்திருக்கிறார். 3 பேரும் ஒன்றாக வாழ்கின்றனராம்.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில்,

ஒரு தாலி ஒரு கணவருக்காகவும்மற்றொரு தாலி இன்னொரு கணவருக்காகவும் அணிந்துள்ளேன்நாங்கள் 3 பேரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

பேரும் எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வோம்சேர்ந்து சாப்பிடுவோம்சேர்ந்து தூங்குகிறோம்.

2கணவர்களுடனும் நேரத்தை திறம்பட நிர்வகிக்கிறேன் என கூறியுள்ளாராம் அந்த பெண்.

இந்த நிலையில் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button