பலதும் பத்தும்

50 வயதில் 14-வது குழந்தையை பெற்றெடுத்த பெண்!

50 வயது பெண் ஒருவர் தனது 14 வது குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டம் பில்குவாவில் உள்ள பஜ்ரங்புரியில் வசிப்பவர் இமாமுதீன். இவரது 50 வயது மனைவி குடியா. இவர்களுக்கு 13 குழந்தைகள். மூத்த மகன் வயது 22. கடைசி குழந்தை வயது 3.

இந்நிலையில் 50 வயதில் மீண்டும் கருத்தரித்த பெண்ணுக்கு கடந்த வெள்ளிக்கிழமை 14வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

வைத்தியாலை செல்லும்போது எம்புலன்ஸிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது அவரது 22 வயது மகனும் உடன் இருந்தார்.

அதன்பின் தாயும் குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். தற்போது அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளனர்.

இமாமுதீனின் மனைவிக்கு 14வது குழந்தை பிறந்த செய்தியைக் கேள்விப்பட்ட பிறகு, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், தொலைதூர இடங்களிலிருந்தும் மக்கள் இமாமுதீனையும் அவரது 14 குழந்தைகளை சந்திக்க வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button