முச்சந்தி

கொழும்பு தமிழ்ச்சங்க நிறுவுனர் தினத்தில், செங்கதிரோன் கோபாலகிருஷ்ணனுக்கு கௌரவிப்பு

கொழும்பு தமிழ்ச்சங்க நிறுவுனர் தின நிகழ்வு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் சனியன்று நடைபெற்றபோது பல்துறை ஆளுமையுள்ள த.கோபாலகிருஷ்ணன் செங்கதிரோன் கௌரவிக்கப் பட்டார்.

இவருக்கான கௌரவிப்பு உரையை நிர்வாக குழு உறுப்பினர் மு.மனோகரன் சிறப்பாக நிகழ்த்தினார். கவிஞராக எழுத்தாளராக கலை இலக்கிய விமர்சனராக அரசியல் ஆய்வாளராக பளிச்சிடும் இவர் செங்கதிர் என்னும் சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருக்கின்றார்.

கிழக்கின் அரசியலில் தனித்துவம் பேணுவதுடன் இலக்கிய முயற்சிகளின் உந்துசக்தியாகவும் செயற்பட்டு வருகின்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button