முச்சந்தி
உத்தரவாதமற்ற உக்ரைன் போர் நிறுத்தம்; சர்வதேச அமைதி காக்கும் படை சாத்தியமா?; ஐங்கரன் விக்கினேஸ்வரா

இரு நாடுகளும் நிபந்தனைகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன. எவ்வாறாயினும் இப்போர் நிறுத்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது – என்ன இல்லை என்பதனை அலசும் ஓர் பார்வையாகும்)
அமெரிக்க முன்வைத்த போர் நிறுத்த திட்டத்தை இரு நாடுகளும் நிபந்தனைகளுடன் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன. ஆனாலும் இதுவரை இப்போர் முடிவுக்கு வர ரஷ்யாவோ அல்லது உக்ரைனோ தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளவில்லை என்பது தெட்டத் தெளிவாக தெரிகிறது.
ஏனெனில் இருதரப்பும் முன்னைய போர் நிறுத்த காலத்தில் தம்மை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இது இம்முறையும் வெளிப்படையாகவே தெரிகிறது.
எவ்வாறாயினும் இப்போர் நிறுத்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது – என்ன இல்லை என்பதனை அலசும் ஓர் பார்வையாகும்.
சர்வதேச அமைதி காக்கும் படை:
இந்த போர் நிறுத்தத்தை கண்காணிக்க உக்ரைனில் சர்வதேச அமைதி காக்கும் படையை ரஷ்யா ஏற்றுக் கொள்ளாது என தெரிவித்துள்ளது.நேட்டோ படைகளின் அதிகாரப்பூர்வ ஈடுபாடானது, ரஷ்யாவிற்கு எதிரான படைகளாகவே மாஸ்கோ பார்க்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அண்மையில் கூறியுள்ளார்.
சமரசம் செய்வதற்கு எந்த இடமும் இல்லை என்று நாங்கள் கருதுகிறோம். நேட்டோ படைகள் ரஷ்யாவுடன் வெளிப்படையான விரோத நோக்கத்துடன் செயல்படுகின்றன என்று லாவ்ரோவ் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைதி காக்கும் படைகளை தவிர்க்க, புட்டின் அமெரிக்க போர் நிறுத்த திட்டத்தை ஆதரிக்கிறார் என்றும், ஆனால் மோதலுக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்ய நீண்டகால அமைதிக்கான உத்தரவாதங்களை வலியுறுத்துகிறார் என்றும் கூறப்படுகிறது.
புட்டின் ஆதரவு உண்மையா ?
ஆனாலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என்றும் எந்தவொரு போர் நிறுத்தமும் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் புட்டின் கோரியுள்ளார்.
போரை நிறுத்துவதற்கான திட்டங்களுடன் நாங்கள் உடன்படுகிறோம் என்றும், ஆனால் இந்த நிறுத்தம் நீண்டகால அமைதிக்கு வழிவகுக்கவும், இந்த நெருக்கடியின் காரணங்களை நீக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நாம் நமது அமெரிக்க சகாக்களுடனும் கலந்து பேச வேண்டும். இந்த நேரத்தில் இந்த யோசனை சரியானது. நாங்கள் நிச்சயமாக இதை ஆதரிக்கிறோம். ஆனால் நாம் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள் இன்னும் பல உள்ளன என்று புட்டின் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், புட்டினின்
சாதகமான பதில் மிகவும் நம்பிக்கைக்குரியது. ஆனால் அது முழுமையாக இல்லை என்றும் ரஷ்யத் தலைவரைச் சந்திக்கவோ பேசவோ தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
சாதகமான பதில் மிகவும் நம்பிக்கைக்குரியது. ஆனால் அது முழுமையாக இல்லை என்றும் ரஷ்யத் தலைவரைச் சந்திக்கவோ பேசவோ தாம் தயாராக இருப்பதாகவும் கூறினார்.இதேவேளை போர் நிறுத்தத்திற்கு ஆதரவளிக்கும் வேளையில், தெளிவுபடுத்த வேண்டிய பல பிரச்சினைகளையும் புட்டின் பட்டியலிட்டார்.
முப்பது நாள் போர் நிறுத்தம்:
ரஷ்யாவுடனான போரில் உடனடி முப்பது நாள் போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரைனும் கூறியுள்ளது.
சவூதி நகரமான ஜெட்டாவில் அமெரிக்க – உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.
அங்கு வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையின் படி உக்ரைன் உடனடி இடைக்கால முப்பது நாள் போர் நிறுத்தத்தை அமல்படுத்த தயாராக உள்ளது. அதை மேலும் நீட்டிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.
இது கீவ் அரசின் ஆரம்ப வான் மற்றும் கடல் போர் நிறுத்தத்திற்கான முந்தைய பரிந்துரையை விட அதிகமாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இந்த ஒப்பந்தம் முழுமையான போர் நிறுத்தத்திற்கானது என்று தெரிவித்துள்ளார்.
மீண்டும் உளவுத் தகவல் பரிமாற்றம்:
டிரம்புக்கும் உக்ரைனின் தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான ஓவல் அலுவலக மோதலுக்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான உறவை சரிசெய்வதில் இந்த பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் கவனம் செலுத்தின.

இந்தப் பேச்சுவார்த்தை மூலம் வாஷிங்டன் உடனடியாக உளவுத்துறை பகிர்வு மீதான இடைநிறுத்தத்தை நீக்கி, உக்ரைனுக்கு பாதுகாப்பு உதவியை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை!
இருப்பினும், ஜெலென்ஸ்கியின் முக்கிய கோரிக்கை என்னவென்றால், அமெரிக்க அரசு உடனடியாக உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்க கோரியுள்ளது. இதன் அடிப்படையில் ரஷ்யா எந்தவொரு போர்நிறுத்தம் அல்லது அமைதி ஒப்பந்தத்தையும் கைவிடாமல் இருக்க வேண்டும் என்று உக்ரைன் விரும்புகிறது.
உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் என்ற சொற்றொடர் இந்த கூட்டு அறிக்கையில் இல்லை. இது உலகத் தலைவர்களால் கவனிக்கப்பட்டது. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஜெட்டா பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பாராட்டினார். ஆனால் கீவ்வுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை என்று எச்சரித்தார்.
டிரம்பின் கனிம ஒப்பந்தம்:
உக்ரைனின் கனிம வளங்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயில்
அரைப்பங்கை அமெரிக்காவிற்கு வழங்க ஜெலென்ஸ்கி மீது அழுத்தம் கொடுக்க டிரம்ப் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைப் பயன்படுத்திக் கொண்டார். ஜெலென்ஸ்கி ஏற்கனவே கையெழுத்திடாதது குறித்து அமெரிக்க ஜனாதிபதி கோபமடைந்தும் உள்ளார்.
அரைப்பங்கை அமெரிக்காவிற்கு வழங்க ஜெலென்ஸ்கி மீது அழுத்தம் கொடுக்க டிரம்ப் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பைப் பயன்படுத்திக் கொண்டார். ஜெலென்ஸ்கி ஏற்கனவே கையெழுத்திடாதது குறித்து அமெரிக்க ஜனாதிபதி கோபமடைந்தும் உள்ளார்.இரு ஜனாதிபதிகளும் உக்ரைனின் முக்கியமான கனிம வளங்களை மேம்படுத்துவதற்கான ஒரு விரிவான ஒப்பந்தத்தை விரைவில் முடிக்க ஒப்புக்கொண்டனர் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கைதிகள் பரிமாற்றம் :
போர்நிறுத்தத்தில் போர்க் கைதிகளின் பரிமாற்றம், பொதுமக்கள் கைதிகளை விடுவித்தல் மற்றும் உக்ரேனிய குழந்தைகளை ரஷ்யாவிற்குத் திருப்பி அனுப்புதல் ஆகியவை அடங்கும்.
இந்த பேச்சுக்குப் பிறகு ஜெலென்ஸ்கி தனது தொலைக்காட்சி அறிக்கையில், உக்ரைன் அமைதியைத் தேடுவதில் உறுதியாக இருப்பதாகவும், ஆனால் ரஷ்யாவை அவ்வாறு செய்ய சமாதானப்படுத்துவது அமெரிக்காவின் பொறுப்பாகும் என்றும் கூறினார்.
பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கிய அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பந்து இப்போது ரஷ்யாவின் கைகளில் இருப்பதாகக் கூறினார்.
தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்வதா அல்லது படிரம்ப் நிர்வாகத்துடனான உறவுகளை மோசமாக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதா என்பதை விளாடிமிர் புட்டின் இப்போது முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
ரஷ்யாவுக்கும் ட்ரம்ப் எச்சரிக்கை:
போர் நிறுத்தத்துக்கு தயாரில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரஷ்யாவுக்கு
ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்தகுந்த பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று டிரம்ப் மேலும் எச்சரித்துள்ளார்.
ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்தகுந்த பொருளாதார தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று டிரம்ப் மேலும் எச்சரித்துள்ளார்.அமெரிக்க பிரதிநிதிகள் ரஷ்யாவுக்குச் செல்ல இருக்கின்றனர். ரஷ்யா போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் உக்ரைன் சம்மதம் தெரிவித்திருந்தது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம், நிலம், கடல் மற்றும் வான்வழித்தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
ஆனால் ரஷ்யா இதுகுறித்து இன்னும் உறுதியான நிலைப்பாட்டினை எடுக்கவில்லை. ஒரு முடிவினை எட்டுவதற்கு முன்பாக அமெரிக்காவிடமிருந்து கூடுதல் தகவலுக்காக காத்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதனிடையே, உக்ரைனுடன் போர்நிறுத்தத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக்கொள்வார் என்றாலும் அதற்கு முன்பாக தனது நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார். இதனால் பேச்சுவார்த்தை இழுபறியாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.
ரஷ்யாவின் கோரிக்கை:
போர்நிறுத்தம் உக்ரேனிய துருப்புக்களுக்கு, குறிப்பாக ரஷ்யாவின் கூர்ஸ்க் பிராந்தியத்தில், ஆயுதங்களைப் மேலும் பெறுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தப்படாது என்பதற்கான உத்தரவாதங்களை ரஷ்யா கோருவதாக புட்டின் வேண்டியுள்ளார்.
இந்த விவகாரத்தில் போர்நிறுத்தத்தை யார் கண்காணிக்கப் போகிறார்கள் என்பதையும் மாஸ்கோ விவாதிக்க விரும்புகிறது என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியுடன் விரைவில் பேசப் போவதாக புட்டின் கூறியதுடன், ரஷ்யா இந்த மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவாக உள்ளது என்பதை உறுதி செய்துள்ளார்.புட்டுன் இந்த படையெடுப்பை உக்ரைனின் நேட்டோ இராணுவ மயமாக்கலை எதிர்க்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கைஎன்று விவரித்துள்ளார்.
நேட்டோ இராணுவக் கூட்டணியின் ஒரு பகுதியாக மாறுவதற்கான கோரிக்கையை உக்ரைன்
கைவிட வேண்டும் என்றும், நாட்டின் தென்கிழக்கில் பகுதியளவு ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு உக்ரேனியப் பகுதிகளை ரஷ்யா இணைத்ததை கீவ் அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றும் ரஷ்யத் தலைவர் கோரியுள்ளார்.
கைவிட வேண்டும் என்றும், நாட்டின் தென்கிழக்கில் பகுதியளவு ஆக்கிரமிக்கப்பட்ட நான்கு உக்ரேனியப் பகுதிகளை ரஷ்யா இணைத்ததை கீவ் அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றும் ரஷ்யத் தலைவர் கோரியுள்ளார்.தற்போதய கள நிலவரப்படி ரஷ்யப் படைகள் கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து முன்னேற்றங்களை மேற்கொண்டு வருகிறது.கடந்த ஆண்டு ஆகஸ்டில் உக்ரேனிய துருப்புக்கள் ஒரு திடீர் ஊடுருவலில் கைப்பற்றிய ரஷ்ய பிராந்தியமான கூர்ஸ்க்கில் உள்ள பிரதேசத்தை மீண்டும் ரஷ்யா முழுமையாக கைப்பற்ற முயல்கின்றது.
![]()