மன்னார் காற்றாலை திட்டத்தை மீண்டும் முன்னெடுக்க அதானி நிறுவனம் பச்சைக்கொடி

மன்னார் காற்றாலை திட்டத்துக்கு இலங்கை அரசாங்கம் முன்னர் வழங்கிய அனுமதியை தொடர விரும்பினால், அத்திட்டத்தை மீண்டும் முன்னெடுப்பதற்கு தயாராக உள்ளதாக அதானி நிறுவனத்தால் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருட நீண்ட விவாதங்களுக்குப் பிறகு இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்கும் வரை, மீளப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டம் மற்றும் தொடர்புடைய பரிமாற்ற வலையமைப்பு விரிவாக்கத் திட்டங்களை நிறுத்த நிறுவனம் முயற்சித்ததாக அந்நிறுவனம் எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் முடிவு அறிவிக்கப்படும் வரை காத்திருந்த போதிலும், அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பும் கிடைக்காததால், தொடர்புடைய திட்டங்களிலிருந்து விலக முடிவு செய்ததாகவும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பரிமாற்றத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த எப்போதும் தயாராக இருப்பதாக அதானி கிரீன் எனர்ஜி இலங்கை லிமிடெட் கூறியுள்ளது.
இந்தத் திட்டத்தையோ அல்லது வேறு எந்த அபிவிருத்தி பணிகளையோ மேற்கொள்ள தங்கள் நிறுவனம் எப்போதும் தயாராக இருப்பதாக அதானி கிரீன் எனர்ஜி ஸ்ரீலங்கா கூறியுள்ளது.
இதேவேளை மன்னார் காற்றாலை திட்டம் இன்னும் ரத்து செய்யப்படவில்லை என்றும் அதானி கிரீன் எனர்ஜி இலங்கை தனது முடிவைத் தெரிவிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்றத்தில் நடைபெற்ற எரிசக்தி அமைச்சின் ஆலோசனைக் குழுவில் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.
![]()