முச்சந்தி

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இன்றுடன் நிறைவு!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்றுடன் (12) முடிவடையவுள்ளது.

அதன்படி, தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் இன்று நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்க விரும்பும் அரசு அலுவலர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் தங்களது விண்ணப்பங்களை அந்தந்த தொகுதிக்குட்பட்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சான்றளிக்கும் அலுவலர்கள் மூலம் சமர்ப்பிக்கலாம்.

இதேவேளை, வேட்புமனு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் நியமனக் கடிதங்களை மார்ச் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னதாக அந்தந்த உள்ளூராட்சி அமைப்புகளின் தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாளை (13) பெளர்ணமி தினமான போதிலும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button