முச்சந்தி

பயங்கரவாதச் சட்டத்தை நீக்க கோரி யாழில் கையெழுத்து போராட்டம்

அநுர அரசு வாக்குறுதியளித்தபடி பயங்கரவாதச் சட்டத்தை நீக்க கோரியும், மருந்துகள், அத்தியாவசிய உணவு மற்றும் பாடசாலைப் பொருட்களுக்கான வரிச் சுமையைக் குறைக்குமாறு கோரியும் மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல்-10 மணி முதல் நண்பகல்-12 மணி வரை யாழ்ப்பாண மத்திய பஸ் நிலையம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்றது.

குறித்த கையெழுத்துப் போராட்டத்தில் பொதுமக்களும், மாணவர்களும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button