பலதும் பத்தும்

அவுஸ்திரேலியாவில் மலர்ந்த காதல்; கொலம்பியா பெண்ணை கரம்பிடித்த இந்தியர்

இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கொலம்பியாவைச் சேர்ந்த இளம்பெண்ணை அவுஸ்திரேலியாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்திய மாநிலம் தெலங்கானாவைச் சேர்ந்தவர் சாய் சைதன்யா. இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியாவிற்கு படிப்பிற்காக சென்றார்.

அங்கு பட்டப்படிப்பை முடித்த சைதன்யா, அங்குள்ள நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

அப்போது கொலம்பியாவைச் சேர்ந்த ரியா என்ற பெண்ணை அவர் சந்தித்துள்ளார். நட்பாக பழகிய இருவரும் ஒரு கட்டத்தில் காதலில் விழுந்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சைதன்யா, ரியா ஜோடி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளது. அதன்படி இருவரும் தங்களது பெற்றோரிடம் இதனை கூற அவர்கள் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் தெலங்கானாவின் கேசமுத்ரத்தில் சாய் சைதன்யா மற்றும் ரியா ஜோடிக்கு திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button