பலதும் பத்தும்

பிரித்தானியாவில் ஆங்கிலம் பேசத் திணறும் மக்கள்!

பிரித்தானியாவில் வாழும் சுமார் ஒரு மில்லியன் மக்களுக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என ஆய்வறிக்கையொன்றில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து வெளியான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், வெளிநாட்டில் பிறந்த பத்து சதவீத குடியிருப்பாளர்கள் ஆங்கில மொழியை கற்றுக்கொள்வதில் திணறுவதாகவே தெரிய வந்துள்ளது.

மேலும் 16 வயதுக்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆங்கிலம் பேசக்கூடியவர்கள் எனவும், 51.6 சதவீதமானோர் ஆங்கிலம் தங்கள் முக்கிய மொழியாகக் கருதுவதாகவும், 38.4 சதவீதமானோர் தங்களால் நன்றாகப் பேச முடியும் என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதேவேளை 8 சதவீதமான 7,94,332 மக்கள் தங்களால் நன்றாக ஆங்கிலம் பேச முடியாது என தெரிவித்துள்ளனர். அத்துடன் 1.4 விழுக்காட்டினர், சுமார் 1,37,876 பேர்கள் ஒரு வார்த்தைக் கூட ஆங்கிலம் தெரியாது என குறிப்பிட்டுள்ளனர்.

வெளியாகியுள்ள தரவுகள் தீவிர நடவடிக்கை தேவை என்ற கோரிக்கையை தூண்டியுள்ளது. மட்டுமின்றி, அரசியல் தலைவர்கள் பலர் தெரிவித்துள்ள கருத்தில், அரசாங்கம் இந்த விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றே கோரியுள்ளனர்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு 27 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டவர்களை நாடுவதற்கு பதிலாக உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என நிறுவன முதலாளிகளை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button