பலதும் பத்தும்

சாவகச்சேரியில் சிவராத்திரி தினத்தன்று உலக சாதனை நிகழ்வு

சிவராத்திரி தினமான நாளை புதன்கிழமை தென்மராட்சியைச் சேர்ந்த உலக சாதனையாளர் செ.திருச்செல்வம் புதிதாக இரண்டு உலக சாதனைகளை நிகழ்த்தவுள்ளார்.

1500கிலோ எடை கொண்ட வாகனத்தை தனது உடலில் கட்டி 7 கிலோ மீற்றர் தூரம் இழுப்பதுடன் 3000 கிலோ எடை கொண்ட வாகனத்தை தனது காதுகளில் கட்டி 50மீற்றர் தூரம் இழுத்தும் புதிய உலக சாதனைகளை நிகழ்த்தவுள்ளார்.

இந்த நிகழ்வு நாளை பிற்பகல் 3.30 மணிக்கு கைதடி பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பித்து சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் நிறைவடையவுள்ளது.

60வயதான உலக சாதனையாளர் திருச்செல்வம் இதற்கு முன்னரும் உலக சாதனைகள் பலவற்றை நிகழ்த்தி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button