பலதும் பத்தும்

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற தமிழ் தம்பதி கட்டுநாயக்கவில் அதிரடிக் கைது

கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையை சேர்ந்த தமிழ் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலியான விசாக்களை பயன்படுத்தி ஜப்பான் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட கணவருக்கு 40 வயது எனவும் மனைவிக்கு 34 வயது எனவும் தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 8.35 மணிக்கு ஜப்பானுக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-454 இல் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தரகர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபா தருவதாக கூறி இந்த போலி கனடா விசாவை தயாரித்துள்ளதாகவும், ஜப்பானின் நரிட்டா நகரத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து கனடாவுக்கு தப்பிச் செல்ல தயாராக இருந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button