கவிதைகள்

அ, ஆ, இ . . . காதல்!… கவிதை… மெல்போர்ன் அறவேந்தன்

அந்திசாயும் நேரம் நீயும் வரவேணும்,
ஆத்தங்கரை ஓரம் காத்திருப்பேன் நானும்.

இன்பத்தேனை ஊற்றும் குயிலினிசைப் பாட்டும்,
ஈரமான பனிக்காற்றும் நம்மைத் தாலாட்டும்.

உன்னைக் காணும் நிலவும் நாணியோடி ஒளியும்,
ஊர்உறங்கும் நேரம் நம்காதல் அரங்கேறும்.

என்மார்பில் நீயும் சாய்ந்திருக்கும் நேரம்,
ஏழுபிறப்பும் இதுபோல் இருந்துவிடத் தோணும்.

ஐந்தல்ல ஆறல்ல ஆயிரம் ஆண்டுக ளாயினும்,
ஒப்பில்லா நம்காதல் ஊர்உலகம் போற்றும்.

ஓருயிர் ஈருடலாய் வாழும்நம் காதல்கதை என்றும்,
ஒளடதமாய் உலகின் காதலர்க்குப் பிணியாற்றும்.
இஃதன்றோ காதல், இக்காதல் வாழ்வும்,
இவ்வுலகில் சொர்க்கம் உள்ளதென்று காட்டும்.

__ மெல்போர்ன் அறவேந்தன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *