இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம்; அசாத் மௌலானாவை விசாரிக்க வேண்டும்! – கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் எஸ். ஐ. இமாம் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படாது என கொழும்பு மறைமாவட்டத்தின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் செயலாளர் அசாத் மௌலானாவை விசாரிக்குமாறு அருட்தந்தை கூறினார்.

மௌலானாவை நாடு கடத்த வேண்டும் அல்லது வேறு வழிகளில் விசாரிக்க வேண்டும். செனல் 4 கிளிப் சுரேஷ் சாலே மற்றும் மௌலானா இருவரையும் குறிப்பிடுகிறது.

இருப்பினும் இன்றுவரை சாலே மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளார். எனவே மௌலானாவையும் விசாரிப்பது அவசியம் என அருட்தந்தை சுட்டிக்காட்டினார்.

விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னர் தீர்மானங்களை எடுக்கக் கூடாது, தற்போதைய அரசாங்கத்தை நம்புவதாக நூறு சதவீதம் சொல்ல முடியாத போதிலும் விசாரணைகள் சரியான திசையில் நகரும் என்று கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *