பலதும் பத்தும்

‘ச்சீ ச்சீ ச்சீ’ பாடலுக்குப் பின்னால் இப்படியொரு சோகமா?

யூடியூப், இன்ஸ்ட்டா ரீல்ஸ் என அனைத்திலும் கலக்கிக் கொண்டிருக்கும் ஒடியா மொழிப் பாடலான ‘ச்சீ… ச்சீ…’ சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு தற்போது வைரலாகிறது. ஆனால், அதைப் பார்க்க, பாடலை உருவாக்கியவர் இல்லை என்பதுதான் சோகம். அது குறித்து பார்ப்போம்.

காதலில் ஒரு மேஜிக்கை எதிர்பார்ப்பவர்களுக்கெல்லாம் இன்று வரை Reference ஆக இருந்து வரும் துள்ளாத மனத்தை மீண்டும் துள்ள வைத்துள்ளது அண்மையில் ட்ரெண்டாகி உள்ள பாடல். நாயகி அழுகிறார்…. நாயகன் சோகத்துடன் பாடுகிறார்…. மற்றபடி என்ன பாடுகிறார்.. என்ன மொழியில் பாடுகிறார்… எதற்காகப் பாடுகிறார்… இப்படி, எதுவுமே தெரியாத இந்த பாடல்தான் 2K கிட்ஸ்களை ஆக்கிரமித்துள்ளது.

காதல் தோல்வி கண்டென்ட் என்பதை, அதில் நடித்தவர்களின் முக பாவனையை வைத்து கண்டுபிடித்துவிட்ட நெட்டிசன்கள், ரீல்ஸ்களாக கலாய்த்து வருகின்றனர். தங்கள் ரியாக்சனால் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ள அந்த நடிகரையும், நடிகையையும் தேடிக் கண்டுபிடித்து வளைத்து வளைத்து பேட்டி எடுத்து வருகிறார்கள் Vlog விரும்பிகள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button