ராஜபக்சாக்களின் கைதை சஜித் எதிர்க்கிறாரா?
ராஜபக்சாக்கள் கைதுசெய்யப்படும் போது சஜித் பிரேமதாச அதனை எதிர்த்து குற்றம்சாட்டுகின்றார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க யோசித ராஜபக்ச கைதுசெய்யப்படும்போது ஹர்சன ராஜகருணவே அதனால் மிகவும் வேதனையடைந்தவராக காணப்படுகின்றார் எனவும் கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திருடர்களை பாதுகாக்கின்றது என்ற குற்றச்சாட்டினை நிராகரித்துள்ள அமைச்சர் பிமல்ரத்நாயக்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர் கட்சித் தலைவர் சஜித், தான் ரணில் விக்கிரமசிங்க பக்கம் நிற்கின்றாரா? ராஜபக்ச குடும்பத்துடன் நிற்கின்றாரா? அல்லது மக்களுடன் நிற்கின்றாரா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
சமீபத்தில் யோசித ராஜபக்ச கைதுசெய்யப்பட்டமை,நாமல் ராஜபக்சவிற்கு எதிராக கிரிஸ் திட்டம் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் போன்றவற்றை சுட்டிக்காட்டியுள்ள பிமல் ரத்நாயக்க, அரசாங்கம் ஊழலிற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
![]()