பெப்ரவரியில் உருவாகும் மகாலட்சுமி யோகம்…

மன உறுதி, படைப்பாற்றல், கலை ஆகியவற்றின் அதிபதியாக இருக்கும் சந்திரனும் தைரியம், நிலம், படை, வீரம் போன்றவற்றின் அதிபதியாக இருக்கும் செவ்வாயும் இணைவது மகாலட்சுமி யோகத்தை உருவாக்குகிறது.

செவ்வாய் தற்சமயம் மிதுன ராசியில் இருக்கிறார். அதேநேரம் எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம் திகதி சந்திரன் மிதுன ராசியில் பிரவேசிக்கிறார். இதனால் மகாலட்சுமி யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகம் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டமாக அமையப் போகிறது எனப் பார்ப்போம்.

துலாம்

நிதி தொடர்பான விடயங்களில் லட்சுமி தேவியின் பூரண ஆசிகள் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். பரம்பரைச் சொத்துக்கள் மூலம் இலாபம் கிட்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும். வாழ்வில் முன்னேற்றத்துக்கான வாசல் திறக்கும்.

மகரம்

ஆடம்பர வசதிகள் அதிகரிக்கும். திடீர் பண நன்மைகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். பல சாதனைகள் பெறுவீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். சில உயர் பதவிகள் கிடைக்கும். நிதி நிலை மிகவும் சீராக இருக்கும்.

கும்பம்

புதிய முயற்சிகளுக்கு மேலதிகாரிகளின் துணை இருக்கும். அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உழைப்புக்கேற்ற நிதி நன்மைகள் கிடைக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *