யாழ் பல்கலை மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு; நிறைவுக்கு வந்த உண்ணாவிரத போராட்டம்..!

மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டமானது (25) மாலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து, ⁠போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய், விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய், ⁠மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து – மாணவர்களிற்கு உடனடி நிவாரணம் வழங்கு உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையினர், ஆகாரத்தை வழங்கி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *