பெப்ரவரி 1 ம் திகதி முதல் யாழுக்கு இரவு ரயில் சேவை
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்குமான இரவு தபால் ரயில் சேவை மீண்டும் பெப்ரவரி 1ம் திகதி முதல் நடைபெறவுள்ளது.
இந்த இரவு தபால் ரயில் சேவை கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெறாமல் இருந்தது. இதனால் வடக்கு நோக்கிய பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியிருந்தனார்.
இந்த நிலையில் சர்வதேச இந்துமத பீட செயலாளர் சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள்- பாபு சர்மா இது பற்றிய கோரிக்கையை போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயகவிடம் விரிவாகத் தெரிவித்து இரவு ரயில் சேவை நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் பூஜையின் போது இது பற்றி பாபு சர்மா அமைச்சர் பிமல் ரத்னாயக்காவிற்கு தெரிவித்த போது அவர் பெப்ரவரி 1ம் திகதி முதல் இரவு தபால் சேவை நடைபெறும் என்றும் அது கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கான பயணமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிற்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் அமைச்சர் பிமல் ரத்னாயக்காவிற்கு பாபுசர்மா நன்றியையும் தெரிவித்தார்.
வடபகுதிக்கு இந்த இரவு தபால் ரயில் சேவை மீளவும் ஆரம்பிக்கப்படுவது மக்களுக்கு நல்ல வரப்பிரசாதம் என்றும் அவர் தெரிவித்தார்.
![]()