ரணில்- சஜித் இணைப்பு பேச்சுக்கள் மிக விரைவில்!
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை இணைப்பதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க தேவையான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை திஸ்ஸ அத்தநாயக்கவால் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஏதேனும் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என்று கீழ் மட்டத்தில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில் இது தொடர்பில் விருப்பம் உள்ளது. இதன்படி ஐக்கிய மக்கள் சார்பில் பொதுச் செயலாளர் தலைமையில் பிரதிநிதிகள் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ளூராட்சித் தேர்தலை இலக்கு கிடையாது. ஒன்றிணைந்து அரசியலில் பயணிப்பதற்கான பாதையை உருவாக்குவதற்காகவே உள்ளூராட்சித் தேர்தலை பயன்படுத்த எதிர்பார்க்கின்றோம். கீழ் மட்ட மக்களிடம் இருந்து முன்வைக்கப்படும் பலத்த கோரிக்கையே இதற்கு காரணமாக இருக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமன்றி அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து பயணிப்பதற்கே எதிர்பார்க்கின்றோம்.
இதில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியை ஒன்றிணைக்க எதிர்பார்க்கவில்லை. இணக்கப்பாட்டுடன் கூட்டணி அமைக்கலாம். இது தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் குழு கலந்துரையாடி முடிவெடுக்கப்படும். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலும் இது தொடர்பில் குழுவொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாக வேலை செய்யக் கூடிய சூழலை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
நாங்கள் கூட்டணியை அமைத்தால் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினைகள் எழப்போவதில்லை. கூட்டணி அமைத்த பின்னர் கூட்டணி தலைவர் அல்லது தலைவர்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கலாம் என்றார்.
![]()