சீன ஜனாதிபதியை இலங்கை வருமாறு அழைத்தார் அநுர

சீனாவுக்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் உடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு உக்குவிப்பு, சுற்றுலா அபிவிருத்தி உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

சந்திப்பின் இறுதியில் சீன ஜனாதிபதியை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை சீன ஜனாதிபதி அன்புடன் ஏற்றுக்கொண்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை தமது சீன பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடு திரும்ப உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *