உறக்கத்தில் பணக்காரராக மாற்றும் 10 கனவுகள்!

நமக்கு வரக்கூடிய கனவுகள் பல்வேறு பலன்கள் தரக்கூடியதாக அமைகின்றன.நம்முடைய வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

நாம் காணக்கூடிய கனவுக்கு சில பலன்கள் உண்டு. அதே போல பொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு. நம்முடைய ஆழ்ந்த உறக்கத்தின் போது வரக்கூடிய கனவு நமக்கு பல விதத்தில் பலன்கள் அளிக்கும்.

அந்த வகையில் நாம் உறங்கும் போது சில கனவுகள் தொன்றும். அப்படி தோன்றும் கனவுகள் நம்மை பணக்காரராக மாற்றும் என சொப்பன சாஸ்திரம் கூறுகின்றது. இந்த பதிவில் பார்க்கலாம்.

சொப்பன சாஸ்திரம்

உங்களது கனவில் தீப்பெட்டி வந்தால் திடீரென்று பண வரவு வருவதற்கு வாய்ப்பு ஏற்படும். இதுவே சிறிய அளவிலான நெருப்பு சுடராக கண்டால் வாழ்க்கையில் செல்வ செழிப்பு ஏற்படும். அதோடு, பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது ஐதீகம்.
ஒருவரது கனவில் பாம்பு கடிப்பது போன்று கனவு வந்தால் கஷ்டம் விலகும் என்பதை குறிக்கும். கடன் தொல்லை நீங்க போகிறது என்று அர்த்தம். இதுவே உங்களது கனவில் வெள்ளை நிற பாம்பு வந்தால் அது மங்களகரமான செய்தியை குறிக்கும்.
ஒருவருக்குக் கனவில் ஆரஞ்சு பழம் தென்பட்டால், அவருக்கும் பண வரவு ஏற்படலாம். ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவது போன்று கனவு கண்டால் வாழ்வாதாரம் உயரும் என்பதை குறிக்கும். ஆரஞ்சு சாப்பிடுவது திருமணத்தின் அறிகுறி அல்லது புதிய தொடக்கத்தின் அறிகுறியாகும்.
நல்ல உறக்கத்தில் இருக்கும் வேளையில் நமக்கு ஏதாவது பழங்களை சாப்பிடுவது போல கனவு கண்டால் அது நமது எங்காவது இருந்து பணத்தின் வரவை குறிக்கிறது என அர்த்தம்.
புதையல் வரம் கிடைக்க கனவில் புதைக்கபட்ட தங்கம் இல்லை வேறெதாவது விலைமதிப்பற்ற பெருட்களை கண்டால் அது புதையல் வரம் கிடைக்கப்போகிறது என அர்த்தம்.
கனவில் பழுத்த கோதுமை கதிர்களைக் காண்பதும் சுபம். இதனாலும் பண வரவு சாத்தியமாகும்.
கனவில் நீங்கள் ஒருவருக்குப் பணத்தைக் கடனாகக் கொடுத்தால், உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணம் கிடைக்கும்.
கனவில் வைரம், நகைகள் போன்றவற்றைக் காண்பது லட்சுமி தேவியின் அருளைப் பெறுவதற்கான அறிகுறியாகும், இவர்களுக்குப் புதையல் கிடைக்கலாம்.
கனவில் நீங்கள் ஒருவருக்கு காசோலை எழுதிக் கொடுத்தால், அவருக்குப் பரம்பரைச் சொத்துக்கள் கிடைக்கும்.
கனவில் குயவர் பானை செய்வதைக் காண்பதும் பண வரவின் அறிகுறியாகும்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *