காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் கைதிகள்

லொஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் இணைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் பெண்களும் அடங்குகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரவிவரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை லொஸ் ஏஞ்சலிஸில் 37 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்புகள் தீக்கிரையாகியுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், கட்டடங்களும் தீக்கிரையாகியுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *