இலங்கையர்கள் உட்பட பல நாட்டவர்களின் மனித உரிமைகளை ஆஸி.அரசு மீறியுள்ளது

இலங்கையர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் தன்னிச்சையாக நவ்று தீவு தடுப்பு முகாம்களில் தடுத்துவைத்திருந்ததன் மூலம் அவர்களின் மனித உரிமைகளை மீறியுள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது.

நவ்றுவில் புகலிடக்கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருந்ததன் மூலம் அவுஸ்திரேலியா அவர்களின் மனித உரிமையை மீறியது என தெரிவித்துள்ள ஐநாவின்மனித உரிமை குழு ஏனைய நாடுகள் இந்த முறையை பின்பற்றுவது குறித்து எச்சரித்துள்ளது.

நவ்றுவில் 25 அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறித்த தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு தீர்ப்புகளிலேயே ஐநாவின் மனித உரிமை குழு இதனை தெரிவித்துள்ளது.

புகலிடக்கோரிக்கை குறித்து தீர்மானிக்கும் பொறுப்பை இன்னுமொரு தரப்பிடம் வழங்கும்போது அரசாங்கம் தனது மனித உரிமை கடப்பாடுகளில் இருந்து விடுபடமுடியாது என ஐநாவின் குழு தெரிவித்துள்ளது.

ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் அறிமுகப்படுத்திய மிகவும் கடுமையான கொள்கையின் மூலம் அவுஸ்திரேலியா படகுகள் மூலம் தனது நாட்டை வந்தடைய முயன்றவர்களை பப்புவா நியுகினியின் மனஸ்தீவு மற்றும் நவ்றுதீவு ஆகியவற்றில் உள்ள தடுப்பு முகாம்களிற்கு அனுப்பியது.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 18 சுயாதீன நிபுணர்கள் அடங்கிய ஐநா குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தனர். அவுஸ்திரேலியா சர்வதேச உடன்படிக்கைகளின் கீழ் தங்கள் உரிமைகளை மீறிவிட்டது குறிப்பாக தடுத்துவைத்திருந்ததன் மூலம் என அவர்கள் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்திருந்தனர்.

எனினும் அவுஸ்திரேலியா இந்த முறைப்பாடுகளை நிராகரித்திருந்ததுடன் நவ்றுவில் இடம்பெற்ற துஸ்பிரயோகங்கள் தனது நியாயாதிக்கத்தின் கீழ் இடம்பெறவில்லை என தெரிவித்திருந்தது.

எனினும் நவ்றுவில் புகலிடக்கோரிக்கையாளர்களிற்கான தடுப்பு முகாம்களை அவுஸ்திரேலியாவே ஏற்பாடு செய்தது என ஐநாவின் குழு தெரிவித்துள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *