உடப்பு திரௌபதியம்மன் தேர்த் திருவிழா இன்று
புத்தளம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் உடப்பு ஶ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஶ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவத்தில் இன்று வெள்ளிக்கிழமை (10) காலை தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவங்கள் தொடர்ந்து 12 நாட்கள் இடம் பெற்றது.
அந்த வகையில் இன்று அதிகாலை 3 மணிக்கு ஸ்நபன அபிஷேகம் ,விஷேட பூஜை அத்துடன் அதிகாலை 5 மணிக்கு சுவர்க்கவாயில் தரிசனம் காலை 8.30 மணிக்கு வசந்தமண்டப பூஜை,அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதி வலம் வந்து இரதத்தில் எழுந்தருளும் காட்சி இடம்பெறும்.
இதன் போது பக்தர்கள் தமது அர்ச்சணைத் தட்டுக்களை அம்பாளுக்கு வழங்குவார்கள்.அத்துடன்
இரதம் ஆலய வெளிவீதி வலம் வந்த பின் ,பூஜை இடம்பெற்று பச்சை சாத்துதல் ,பிராயசித்த அபிஷேகம் ,அன்னதானம் இடம்பெறும்.மாலை 7 மணிக்கு வாமன உற்சவம் இடம்பெறும்.
நாளை சனிக்கிழமை தீர்த்த உற்சவத்துடன் பிரமோற்சம் நிறைவு பெறும்.
![]()