யூனை கைது செய்வதற்கான முயற்சிகள் தீவிரம்

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலைக் கைது செய்வதற்கு மீண்டும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்பட்டமை தொடர்பிலான குற்றச்சாட்டுகளின் கீழ் யூனை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் கைதாவதைத் தடுக்கும் வகையில் ஆதரவாளர்களும் திரண்டிருக்கின்றனர்.

கூட்டத்தைக் கலைத்து யூனைக் கைது செய்யப்போவதாக தென்கொரியாவின் முன்னணி விசாரணை அதிகாரி ஒருவர் உறுதியளித்துள்ளார்.

அண்மையில் முன்னாள் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலைக் கைது செய்ய முடியாமல் அதிகாரிகள் திரும்பினர்.

யூனைக் கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்ற அதிகாரிகளை அவரது பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியதாக சர்வதேச செய்திகள்
தெரிவித்தன.

குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலைக் கைது செய்ய அந்நாட்டின் ஊழல் புலனாய்வுத்துறை அதிகாரிகள்அவரது வீட்டிற்குச் சென்ற போது யூனின் வீட்டுக்கு வெளியே நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.

ஜனாதிபதி யூனை உயிர் கொடுத்து காப்போம்,” என ஆதரவாளர்கள் கோஷமிட்டதுடன் அதிகாரிகள் யூனின் வீட்டு வளாகத்துக்குள் செல்ல எடுத்த முயற்சிகளும் தோல்வியுற்றன.

இதற்கு முன்பும் யூனின் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றபோது அவர்களை உள்ளே அனுமதிக்க அவரின் பாதுகாப்புப் படையினர் மறுத்துவிட்டனர்.

கடந்த மாதம் 3 ஆம் திகதி தென்கொரியாவில் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியதால் யூன் பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளார்.

அவர் அந்த சட்டத்தை மீளப்பெற்ற போதிலும் பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *