முச்சந்தி
ரஷ்ய எரிவாயு ஐரோப்பிய விநியோகத்தை தடை செய்து நிறுத்திய உக்ரைன்! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.


ரஷ்ய எரிவாயு ஐரோப்பிய விநியோகத்தை தடை செய்து நிறுத்திய உக்ரைன்!…
பனியில் உறையும் கிழக்கு ஐரோப்பா
உக்ரைன் ஊடாக ரஷ்ய எரிவாயு விநியோகம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்படும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஐரோப்பிய நாடான மால்டோவாவின் டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியத்தில் அமைந்துள்ள உணவு உற்பத்தியாளர்களைத் தவிர அனைத்து தொழில்துறை நிறுவனங்களையும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பா கடும் பாதிப்பு:
ரஷ்ய மொழி பேசும் சுமார் 450,000 மக்கள் வசிக்கும் டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியம் இது. உக்ரைன் வழியாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு ரஷ்ய எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டதில் இருந்து கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
உணவு தொழிற்சாலைகளுக்கு மட்டும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிலை எதுவரை தொடரும் என்பதும் கணிக்க முடியாத சூழல் இருப்பதாகவே அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஏறக்குறைய மூன்று வருடங்களாக யுத்தம் நீடித்து வந்தபோதிலும், ரஷ்ய எரிவாயு விநியோகத்திற்கு உக்ரைன் அனுமதித்தது. இதனால் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டொலர், போக்குவரத்துக் கட்டணமாக உக்ரைன் வசூலித்தும் வந்துள்ளது.ஆனால் காலாவதியான ஐந்தாண்டு ஒப்பந்தத்தை புதுப்பிக்க உக்ரைன் மறுத்துவிட்டது. இந்த நிலையில் ஸ்லோவாக்கியா மற்றும் ஆஸ்திரியா போன்ற ஐரோப்பிய எரிவாயு வாங்குபவர்கள் மாற்று வழிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகிவிட்டனர்.
ஆனால் ரஷ்யாவுடன் எரிவாயு ஒப்பந்தம் இருந்தும், 1,500 ரஷ்ய இராணுவத்தினர் முகாமிட்டிருந்தும் டிரான்ஸ்னிஸ்ட்ரியா (Transdniestria) மொத்தமாக முடங்கிப் போயுள்ளது. இதனிடையே, வீடுகளுக்கு வெப்பமூட்டுவதும் வெந்நீர் விநியோகத்தையும் உள்ளூர் எரிசக்தி நிறுவனம் குறைத்தது.
பனியில் உறையும் ஐரோப்பா:
ரஷ்ய எரிவாயு ஐரோப்ப விநியோகத்தை உக்ரைன் தடை செய்து நிறுத்தியதால் பனியில் உறையும் நிலைக்கு கிழக்கு ஐரோப்பா வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் தற்போதுள்ள சூழலில் சேமிப்பில் இருக்கும் எரிவாயு அடுத்த பத்து நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என்றே டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியத்தின் பிரதமர் Vadim Krasnoselsky தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எரிவாயு நிறுத்தம்:
மால்டோவா முழுவதற்கும் மின்சாரம் வழங்கிய மின் உற்பத்தி நிலையம் உட்பட டிரான்ஸ்னிஸ்ட்ரியா பிராந்தியத்திற்கு ஆண்டுக்கு சுமார் இரு பில்லியன் கன மீற்றர் எரிவாயுவை ரஷ்யா விநியோகம் செய்து வந்தது.
2.5 மில்லியன் மக்கள் வசிக்கும் மால்டோவா நாடானது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும்
நடவடிக்கைகளை முன்னெடுத்தும் வருகிறது. ரஷ்யாவுடன் சுமூகமான உறவு இல்லாத நிலையில், முன்னாள் சோவியத் நாடான மால்டோவா குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்காக எரிசக்தி நுகர்வை குறைக்க முயற்சித்து வருகிறது.
நடவடிக்கைகளை முன்னெடுத்தும் வருகிறது. ரஷ்யாவுடன் சுமூகமான உறவு இல்லாத நிலையில், முன்னாள் சோவியத் நாடான மால்டோவா குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்காக எரிசக்தி நுகர்வை குறைக்க முயற்சித்து வருகிறது.அது மட்டுமின்றி அண்டை நாடான ருமேனியாவிலிருந்து அதன் தேவைகளில் அறுபது சதவிகிதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது.
இந்த நிலையில், ரஷ்ய எரிவாயு விநியோகம் முடிவுக்கு வந்துள்ளதை அந்த நாட்டின் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்று என விமர்சித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, ஐரோப்பாவிற்கு அதிக எரிவாயுவை வழங்குமாறு அமெரிக்காவை வலியுறுத்தி உள்ளார்.
ஐந்து ஆண்டு ஒப்பந்தம் முடிவு:
உக்ரேனின் எரிவாயு போக்குவரத்து நிறுவனமான நவ்தோகாஷ் (Naftogaz) மற்றும் ரஷ்யாவின் காஷ்ப்ரோம் (Gazprom) ஆகியவற்றுக்கு இடையேயான ஐந்து ஆண்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர், உக்ரேன் வழியாக ஐரோப்பாவிற்கான ரஷ்ய எரிவாயு விநியோகம் 2025 புத்தாண்டு தினத்துடன் முடிவுக்கு வந்தது.
இது ஐரோப்பிய எரிவாயு சந்தையில் மொஸ்கோவின் நீண்ட கால ஆதிக்கத்துக்கான முற்றுப்புள்ளியாக அமைந்தது. அதேநேரம், மாற்று வழியை தேடுவதன் மூலம் ரஷ்ய ஆற்றலைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியம் அதன் முயற்சியையும் இரட்டிப்பாக்கியது.
மேற்கண்ட ஒப்பந்தமானது போரிடும் இரு நாடுகளுக்கிடையே 2019 ஆம் ஆண்டில் எட்டப்பட்டது. இது ரஷ்யாவின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதியை உக்ரேன் வாயிலாக ஐரோப்பிய நாடுகளுக்கு மலிவான விலைகளில் கொண்டு செல்வதற்கு அனுமதித்தது.
இந்த ஒப்பந்தம் மிகவும் இலாபகரமானது, ரஷ்யாவுக்கு வருவாயிலும், உக்ரேனுக்கு போக்குவரத்து கட்டணத்திலும் பில்லியன்களை சேர்த்தது. இந்த நிலையில், ஒப்பந்தம் நிறைவு குறித்து கருத்து வெளியிட்டுள்ள உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எங்கள் இரத்தத்தில் கூடுதல் பில்லியன்களை சம்பாதிக்க ரஷ்யாவை அனுதிக்க மாட்டோம் என்றதுடன், ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று அறிவித்தார்.
ஐரோப்பாவிற்கான ரஷ்யாவின் பழமையான எரிவாயு வழியை நிறுத்துவது, 2014 இல் உக்ரேனிய கிரிமியன் தீபகற்பத்தை இணைத்ததில் தொடங்கி, கண்டத்துடன் ஒரு தசாப்த கால கொந்தளிப்பான உறவுகளுடன் இணைந்த பிரச்சனையாகும். 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது படையெடுத்ததில் இருந்து ரஷ்ய ஆற்றலைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான அதன் முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் தீவிரப்படுத்தி வருகிறது.
பிரஸ்ஸல்ஸ் வெளியிட்ட புள்ளிவிவரங்கள், 2023 இல் மொத்த எரிவாயு இறக்குமதியில் 8% ரஷ்ய எரிவாயுவாக இருந்ததாகக் குறிப்பிடுகிறது.இதற்கு மாறாக, அந்த எண்ணிக்கை 2021 இல் 40% க்கு மேல் இருந்தது.மொஸ்கோவை நம்பியுள்ள கிழக்கு ஐரோப்பா:
பிரஸ்ஸல்ஸ் ரஷ்யாவின் எரிவாயு இறக்குமதியை கணிசமாகக் குறைத்த போதிலும், பல கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் இன்னும் பெரும்பாலும் மொஸ்கோவை நம்பியுள்ளன.
ஆஸ்திரியா மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் இன்னும் பெருமளவிலான ரஷ்ய
எரிவாயுவை இறக்குமதி செய்கின்றன, இது மொஸ்கோவிற்கு வருவாயில் சுமார் ஐந்து பில்லியன் யூரோக்கள் ஆகும்.
எரிவாயுவை இறக்குமதி செய்கின்றன, இது மொஸ்கோவிற்கு வருவாயில் சுமார் ஐந்து பில்லியன் யூரோக்கள் ஆகும்.இதேவேளை உக்ரேன் வழியான எரிவாயு விநியோக முடிவினால், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர்கள் அல்லாத பிற ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு காலத்தில் சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த மால்டோவா கடுமையான இழப்புகளை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
![]()