முச்சந்தி

மத்திய கிழக்கில் ரஷ்யாவின் வீழ்ச்சி: சிரியாவில் ரஷ்ய இராணுவ தளங்கள் மூடல்?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(சிரியாவில் இராணுவப் பிரசன்னத்தை இழப்பது ரஷ்யாவிற்கு மிகப்பெரும் பின்னடைவாக அமையும். புவியியல் ரீதியாகவும், மூலோபாய ரீதியாகவும், மாஸ்கோ இராணுவச் வளங்களை ஆபிரிக்க நாடுகளுக்குக் கொண்டு செல்லும் ஒரு முக்கியமான தளமாகும். சிரியாவில் ரஷ்ய தனது தளங்களை இழப்பது தளவாடங்கள், மறுவிநியோக முயற்சிகள் மற்றும் ஆபிரிக்கா தொடர்புகளை சீர்குலைக்கும் என்பது உண்மையாகும்)
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஆரம்பித்தில் பஷர் அசாத் ஆட்சியின் விரைவான கவிழ்ப்பு ரஷ்யாவிற்கும் மத்திய கிழக்கில் அதன் செல்வாக்கை விரிவுபடுத்தும் அதன் லட்சியங்களுக்கும் ஒரு பாரிய அடியை அளித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் அரபு வசந்தங்களாக எகிப்து, லிபியா, யேமனில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தின. அரபு வசந்தம் தான் அரபு, ஆபிரிக்க நாடுகளின் பேரழிவையும் விளைவித்தது. இறுதியாக சிரியாவில் உள்நாட்டு யுத்தம் பாரிய அழிவைச் சந்தித்து நிற்கிறது.
கிரெம்ளினின் நீண்ட கால கூட்டாளி:
கிரெம்ளின் அரசின் நீண்ட கால கூட்டாளியான ஜனாதிபதி பஷர் அல்-அசாத் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், சிரிய பிரதேசத்தில் ரஷ்யாவின் விமான மற்றும் கடற்படை தளங்களின் தலைவிதி கேள்விக்குறியாக உள்ளது.
ரஷ்யா தனது சிரிய தளங்களில் இருந்து பின்வாங்கிறது என்பதனை மாஸ்கோ அரசு மறுத்துள்ளது. சிரியாவில் ரஷ்யாவிற்கு இரண்டு முக்கிய இராணுவ தளங்கள் உள்ளன. மத்தியதரைக் கடலோரத்தில் உள்ள டார்டஸ்(Tartus) கடற்படை தளம் உள்ளது.
அத்துடன் லதாகியா துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள க்மெய்மிம் விமான தளம் உள்ளது. அவை கிரெம்ளினின் மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இராணுவப் புறக்காவல் நிலையங்களாகக் கருதப்படுகின்றன.
ரஷ்யாவிற்கு மத்தியதரைக் கடலுக்கான ஒரே நேரடி அணுகல் மற்றும் கடற்படை பயிற்சிகள், போர்க் கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நடத்துவதற்கான தளம் ஆகியவற்றை வழங்குகிறது. இதனால் டார்டஸ் தளம் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
டிசம்பர் மாதம் முதல் சிரிய கிளர்ச்சிப் போராளிகள் ஏற்கனவே இரண்டு தளங்களையும் அடிப்படையாகக் கொண்ட லதாகியா மாகாணத்தின் முழு கட்டுப்பாட்டையும் எடுத்துள்ளனர்.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவின் கூற்றுப்படி, இராணுவ தளங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் திறன் கொண்டவர்களுடன் சிரியாவில் தொடர்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறியது.
அத்துடன் ரஷ்ய அரசின் கூற்றுப்படி, பஷர் அல்-அசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் ரஷ்யாவில் அடைக்கலம் கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
சிரியா கிளர்ச்சி படை மாஸ்கோவுடன் புதிய ஒப்பந்தம்?
சிரியாவுடன் தற்போதய புதிய கிளர்ச்சியாளர்கள் அரசுடன் புதிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மாஸ்கோ தளங்களின் தலைவிதியைப் பாதுகாத்துள்ளதாக ரஷ்ய அரசு ஊடகம் கூறியுள்ளது.
ரஷ்யாவின் ஹெமிமிம் (Khmeimim Air Base) மற்றும் டார்டஸ் தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாகக் மேற்குலக சார்பு செய்திகள் வந்தன. குறிப்பாக உக்ரேனிய உளவுத்துறை, ரஷ்யா தனது ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை சிரிய தளங்களில் இருந்து வெளியேற்றுகிறது எனவும் தெரிவித்தது.
சிரியாவில் இருந்து பின்வாங்க, ரஷ்யர்கள் இராணுவ போக்குவரத்து விமானங்களை நிலைநிறுத்தியுள்ளனர். அவை மீதமுள்ள துருப்புக்கள், ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை ஏற்றுகின்றன என்று உக்ரைனின் இராணுவ புலனாய்வு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
அதேவேளை ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, ரஷ்யாவின் டார்டஸ் தளத்தின் செயற்கைக்கோள் படங்கள் குறைந்தது மூன்று போர்க்கப்பல்கள் துறைமுகத்தை விட்டு வெளியேறி கடற்கரையிலிருந்து 13 கிமீ தொலைவில் கடலில் நங்கூரம் இட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டது.
வருடத்தின் இறுதியில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் ரஷ்ய கப்பல்களான ‘அட்மிரல் கோர்ஷ்கோவ்’ போர்கப்பல், ‘அட்மிரல் கிரிகோரோவிச்’ போர் கப்பல், ‘நோவோரோசிஸ்க்’ நீர்மூழ்கிக் கப்பல், துறைமுகத்திற்கு மேற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டது.
ஆயினும் ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் இன்னமும் டார்டஸ் தளத்தில் உள்ளன என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.
ஒரு கட்டாய பின்வாங்கல் ?
சிரியாவில் இராணுவப் பிரசன்னத்தை இழந்தது ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவாக அமையும். புவியியல் ரீதியாகவும், மூலோபாய ரீதியாகவும், மாஸ்கோ இராணுவச் சொத்துக்களை ஆப்பிரிக்க நாடுகளுக்குக் கொண்டு செல்லும் ஒரு முக்கியமான தளமாகும்.
சிரியாவில் ரஷ்ய தளங்களை இழப்பது ரஷ்ய தளவாடங்கள், மறுவிநியோக முயற்சிகள் மற்றும் ஆப்பிரிக்கா தொடர்புகளை சீர்குலைக்கும்.
குறிப்பாக லிபியா, சஹாரா ஆப்பிரிக்காவில் ரஷ்யாவின் செயல்பாடு சக்தியை பலவீனப்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அசாத்தின் ஆட்சியின் விரைவான கவிழ்ப்பு ரஷ்யாவிற்கும் மத்திய கிழக்கில் அதன் செல்வாக்கை விரிவுபடுத்தும் அதன் லட்சியங்களுக்கும் ஒரு பாரிய அடியை அளித்துள்ளது.
கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸைக் கைப்பற்றிய மின்னல் வேகம், உக்ரைன் போரில் ரஷ்யா கவனம் செலுத்துவதால், கிரெம்ளினின் உறுதியான ஆதரவு இல்லாதது ஓரளவுக்குக் காரணம்.
சிரியாவில் அசாத் ஆட்சியின் வீழ்ச்சி எவரும் கற்பனை செய்ததை விட மிக விரைவாகவும் இரத்தக்களரி குறைவாகவும் இருந்தது. குறிப்பாக ரஷ்யாவும் ஈரானும் அசாத்திற்கு ஆதரவளிக்கும் என்ற நம்பிக்கையே முன்பு அடிப்படையில் இருந்தது.
அரபுலக ஆட்சி மாற்ற விளைவு :
துனிசியாவில் 2010ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியாளருக்கு எதிராக மல்லிகைப் புரட்சி என்ற பெரும் கிளர்ச்சி வெடித்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியது. இப்படியாக ஆரம்பித்த அரபு வசந்தம் தான் அரபு நாடுகளிலும, ஆப்பிரிக்க நாடுகளிலும் பல ஆட்சி அதிகாரத்தை மாற்றியது.
அரபு வசந்தங்களாக எகிப்து, லிபியா, யேமனில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தின. அரபு வசந்தம் தான் அரபு, ஆப்பிரிக்க நாடுகளின் பேரழிவையும் விளைவித்தது.
இறுதியாக சிரியாவில் உள்நாட்டு யுத்தம் பாரிய அழிவைச் சந்தித்தது. இந்த அரபு வசந்தத்தின் தாக்குதலுக்கு அல்ஜீரியா, ஈராக், ஜோர்டான், குவைத், மொராக்கோ, சூடானும் தப்பவில்லை.
சவூதி, ஓமன், மேற்கு சகாராவிலும் சாடையாக அரபு வசந்தம் எட்டிப் பார்த்து ஓய்ந்தது.
அரபு வசந்தத்தின் பின்னராக ரஷ்யாவிற்கு மத்திய கிழக்கில் நிலவும் கடுமையான இராணுவ சமநிலை கீழ் நோக்கி சென்றுள்ளது. மத்தியதரைக் கடலுக்கான ஒரே நேரடி அணுகல் மற்றும் கடற்படை பயிற்சிகள், போர்க் கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நடத்துவதற்கான தளம் சிரியாவில் இருந்து தற்போது பின்வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சிரியாவில் இராணுவப் பிரசன்னத்தை இழப்பது ரஷ்யாவிற்கு பெரும் பின்னடைவாக அமையும்.
புவியியல் ரீதியாகவும், மூலோபாய ரீதியாகவும், மாஸ்கோ இராணுவச் வளங்களை ஆபிரிக்க நாடுகளுக்குக் கொண்டு செல்லும் ஒரு முக்கியமான தளமாகும். டார்டஸ் தளம் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் கடற்படை தளம் மேற்குலகின் கட்டுப்பாட்டில் உடனடியாக செல்லாவிடினும், இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயல்வர்.
அத்துடன் ரஷ்யாவின் ஆபிரிக்க சார்பு நாடுகளின் நட்புறவு தொடர்புகளை சீர்குலைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button