அரகலய போராட்டத்துக்குப் பின்னர் அரசியலிலிருந்து விலகிய 6,000 அரசியல்வாதிகள்!

காலி முகத்திடல்(அரகலய) போராட்டத்துக்குப் பின்னர் பல்வேறு நிலைகளில் உள்ள ஏறக்குறைய ஆறாயிரம் அரசியல்வாதிகள் பல்வேறு காரணங்களுக்காக அரசியலில் இருந்து விலகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தின் பின்னர் பல அரசியல்வாதிகள் தமது வேலைத்திட்டங்களில் நம்பிக்கையின்மையால் அரசியலில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டாயிரம் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக கண்காணிப்பு அமைப்புகளுக்கு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் சுமார் முப்பது அரசியல் கட்சிகள் செயலிழந்துள்ளதாகவும் அண்மையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக 80,000க்கும் அதிகமான வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை தேர்தலில் போட்டியிடும் முன் வேட்பாளர்களின் கல்வி மற்றும் ஏனைய தகுதிகள் தொடர்பான தரவுகளை தேர்தல் ஆணைக்குழுவிடம் வழங்குவதை கட்டாயமாக்கும் முறையை உருவாக்க வேண்டும் என்று பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கல்வி மற்றும் ஏனைய தகைமைகள் வாக்காளர்களுக்கு வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கு உதவும் என அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
![]()